கலாம் அமைத்துத் தந்த பாதை நமக்கு வழிகாட்டும்” – பிரதமர் மோடி

ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை ஜூலை 27, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள டாக்டர் கலாம் உருவச் சிலையையும் திறந்துவைத்தார். அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர் டாக்டர் அப்துல் கலாமின் குடும்பத்தினருடன் அவர் சிறிது நேரம் உரையாடினார்.

பிரதமர் தனது உரையின் போது இரண்டே ஆண்டுகளில் நினைவிடத்தை கட்டி முடித்த அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் பாராட்டினார். அரசு திட்டம் என்றாலே தாமதம்தான் என்ற நிலையில் இந்தத் திட்டம் குறித்த காலத்திற்குள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் இப்போது தில்லியில் இருக்கும் அரசு குறித்த காலத்திற்குள் செயல்களை முடிக்கும் அரசு என்றும் கூறினார்.

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இனிமேல் தங்கள் பயணத்திட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் கலாம் அவர்களின் நினைவிடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள் வைத்தார். டாக்டர் கலாமுக்காக அமைக்கப்பட்ட இந்த நினைவாலயம் அவரது வாழ்க்கையையும் அவரது காட்டுவதாகச் சிறந்த வகையில் அமைந்துள்ளது” உணர்ச்சியுடன் கூறினார்.

டாக்டர் கலாம் இந்தியாவின் இளைஞர்களுக்கு உந்துதலாக விளங்கினார். இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் வளர்ச்சியின் உயரத்தை எட்டவேண்டும் என்றும் வேலை உருவாக்குவோராகவும் இருக்க விரும்புகிறார்கள்” என்று பிரதமர் பேசினார்.

தமிழக நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள உதவிகளை பட்டியலிட்ட அவர் தமிழகத்தில் உள்ள எந்தெந்த ஊர்கள், என்னென்ன திட்டங்கள், எவ்வளவு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செயப்பட்டது என்பதை எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் பொழிந்து தள்ளியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பிரமரின் உரைக்கு முன்னதாக ஐந்து முக்கிய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி,

* நீலப் புரட்சித் திட்டத்தின்” கீழ்ப் பெரிய இழுவைப் படகுகளுக்கான அனுமதிக் கடிதத்தை மீனவர்களுக்கு வழங்கினார்.

* ராமேஸ்வரத்துக்கும் அயோத்தி நகருக்கும் இடையில் ஸ்ரத்தா சேது” என்ற எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தைக் காணொலிக் காட்சியின் மூலம் பிரதமர் தொடங்கிவைத்தார்.

* பசுமை ராமேஸ்வரம் திட்டத்துக்கான” (Green Rameswaram Project) குறிப்புரையை அவர் வெளியிட்டார்.  இதற்கான திட்டப்பணி விவேகானந்த கேந்திரத்திடம் ஒப்படைக்கப்பட்டது

* இவற்றுடன், ராமேஸ்வரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை இடையில் 9.5 கி.மீ. நீளமான தேசிய நெடுஞ்சாலை (NH-87) நாட்டுக்கு அர்ப்பணித்து அதற்கான கல்வெட்டையும் திறந்துவைத்தார்.

* கலாம் சந்தேஷ் வாகனம் (Kalam Sandesh Vahini) எனப்படும் நடமாடும் கண்காட்சியின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்து மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் மறக்காமல் தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் வளர்ச்சியை நோக்கி நாடு செல்வதற்கு கலாம் அமைத்துக் கொடுத்த பாதை நமக்கு வழிகாட்டும் என்றார்.

நிகழ்ச்சியில் வெங்கைய நாயுடு, நிர்மலா சீதாரமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுனர் வித்யா சாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமரின் உரையை ஹெச். ராஜா மொழிபெ
யர்த்தார்.

தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம், தேசியத்தின் பக்கம் என்பதை இவ்விழா தெளிவாக பறைசாற்றியது. கலைந்து சென்ற கூட்டத்தினர் பலரிடம் இந்தி தெரிந்திருந்தால் பிரதமரின் உரையும் இன்னமும் எவ்வளவு நன்றாக ரசித்திருக்கலாம் என்ற ஆதங்கம் இருந்ததை உணர முடிந்தது.