கர்மயோகி அனந்தாழ்வான்

அனந்தாழ்வான் என்ற ராமானுஜரின் சீடர்  திருப்பதியில் ராமானுஜர் பெயரில் ஓர் ஏரியை வெட்டி, அருகில் நந்தவனம்  அமைத்திருந்தார். தினமும் மலர்களைப் பறித்து, மாலையாகக் கட்டி, ராமானுஜ ஏரியில் நீராடிவிட்டு, மலையேறி வெங்கடேசப் பெருமாளை சேவித்து மாலை சூட்டுவார். ஒருநாள் மலர்களைப் பறிக்கும்போது, ஒரு பாம்பு அவரைக் கடித்துவிட்டது. அவர் கவலைப்படவில்லை. வழக்கம்போல மாலை கட்டி, பெருமாளைச் சேவிக்கச் சென்றார். பெருமாளுக்கோ பரபரப்பு.

‘‘என்ன அனந்தாழ்வாரே, மருந்து போட்டுக் கொண்டு படுத்திருப்பீர் என்றெல்லவா நினைத்தேன்’’ என்றார் பெருமாள்.

அனந்தாழ்வார் அமைதியுடன் சொன்னார்: ‘‘பெருமாளே! கடித்த பாம்பு சாதாரண பாம்பு, அதனால், ராமானுஜ ஏரியில் குளித்து விட்டு உம்மைத் திருப்பதியில் தொழுகிறேன்; கடித்த பாம்பு அதிக விஷமுள்ள பாம்பாக இருந்திருந்தால், குளிக்கிற வேலை கூட என் வேலையில்லை. மற்றவர்கள் என்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருப்பார்கள். உம்மை வைகுண்டத்திலேயே வந்து தரிசித்திருப்பேன்!’’