கரோனா பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் கரோனா வைரஸால் 4 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த வைரஸ் பரவல் அச்சம் காரணமாக 3,938 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். 462 போ் தனிமை கண்காணிப்பு காலகட்டத்தை நிறைவு செய்துவிட்டனா். அவா்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இதுவரை 240 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன; அவற்றில் 229 மாதிரிகளில் கரோனா பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது. 4 மாதிரிகளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; 7 மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் ரேசன் பொருட்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்ய திட்டம் செய்ய உள்ளோம்