கருணை மிகுந்தவர்களின் கரூர்

கருர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே கொளந்தானூரில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முனியன். இவர் 65 ஆண்டுகளாக லைட் ஹவுஸ் கார்னரில் செருப்பு தைக்கிறார். பள்ளி மாணவ, மாணவியருக்கும் முதியோருக்கும் இலவசமாக செருப்புத் தைத்துத் தருகிறார். இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியறிந்தார் கருர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ்.

தான் கலெக்டர் என கூறாமல், முனியனிடம் சென்றார். செருப்பு தைக்கணுமா?” என கேட்டார் முனியன். ‘’இல்லை உங்களை பற்றி தெரிந்து கொள்ள வந்தேன்” என்றார் கலெக்டர். செருப்புத் தைக்க, 5 முதல்  20 ரூபாய் வரை வாங்குவேன்; சிலர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன். பள்ளிக் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் இலவசமாக சேவை மனப்பான்மையுடன் செருப்புத் தைத்து தருகிறேன்” என்றார்.

கலெக்டர் தன்னை அறிமுகப்படுத்தி, ஏதேனும் உதவி வேண்டுமா?” என கேட்டார். எனக்கு பெட்டிக் கடை வைத்து தர வேண்டும்” எனக் கூறினார். முனியன் கடை வைத்துக் கொள்ள 30,000 ரூபாயும் தொழில் அபிவிருத்திக்கு 20,000 ரூபாயும் தன் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்த கலெக்டர் கோவிந்தராஜ், கரூர் நகராட்சி வளாகத்தில் ஒரு இடமும் ஒதுக்கிக் கொடுத்தார்.

பந்தா ஏதுமின்றி செருப்புத் தைக்கும் தொழிலாளி முனியனின் வாழ்க்கை வளம் பெற உதவிசெய்த கலெக்டரை எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும்!

தகவல் : சொ. செல்வராஜ், சென்னை

நன்றி: தினமலர்