கட்டுமான பொறியாளர்களின் வரவேற்க தக்க செயல்

தமிழகம் முழுவதும் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றித்தர கட்டுமான பொறியாளர்களின் 90 சங்கங்கள் முன்வந்துள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாகி கோ. வெங்கடாச்சலம் கூறியதாவது:திருச்சி நடுகாட்டுப்பட்டியில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறில் விழுந்து இரண்டு வயது குழந்தை சுஜீத் வில்சன் இறந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்ற விழிப்புணர்வு வலுப்பெற்றுள்ளது.ஆழ்துளை கிணறுகளை மூடுவதைவிட அதை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றலாம். இதற்கான வழிமுறைகளை மக்களுக்கு இலவசமாக வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை சுற்றி மழை நீர் இறங்குவதற்காக சிறிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மிக குறைந்த செலவில் இதை செய்வதன் வாயிலாக அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.எங்கள் அமைப்பில் உள்ள 90 சங்கங்களின் உறுப்பினர்கள் இதற்கு தயாராக இருக்கிறோம். பொது மக்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.