ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாகிறது-தமிழக தொல்லியல் துறை

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர்.

ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது. காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரை செல்லும் வழியில் ராமேசுவரம் செல்லும் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்த சத்திரம் இருந்துள்ளது.

இந்த சத்திரத்தை நினைவு சின்னமாக பாதுகாக்க போவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது