ஐயோ பாவம்… துர்கா பூஜையில் கம்யூனிஸ்டுகள்

 

மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் படுதோல்வி அடைந்து திருணமூல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித்   தேர்தலில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டது. கம்யூனிஸ்டுகள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

‘மதம்’ என்பது ஓர் அபின் என்று இதுவரை மத எதிர்ப்பையே தனது கொள்கையாகக் கொண்ட கம்யூனிஸ்டுகள், மத எதிர்ப்பு என்று பொதுவாகச் சொன்னாலும் முஸ்லிம், கிறிஸ்தவர்களைப் பற்றி வாயே திறக்கமாட்டார்கள். மதம் கூடாது என்றால் அவர்கள் அகராதியில் ஹிந்து மதம் கூடாது என்பதுதான்.

கடந்த 2006ம் ஆண்டு கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் அப்போதைய போக்குவரத்து அமைச்சருமான சுபாஷ் சக்கரவர்த்தி தாராபீத் கோயிலிலில் காளி தேவியை வழிபாடு செய்தார். அப்போது அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தில் சமீப காலமாக பாஜக படிப்படியாக வளர்ந்து வருகிறது. இதனால் மிரண்டுபோன கம்யூனிஸ்டுகள் துர்கா பூஜையில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்கள். மக்களிடையே தங்கள் ஆதரவை அதிகரிக்கும் வகையில் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு மத அடிப்படையிலான துர்கா பூஜை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு கம்யூனிஸ்ட் (சிபிஐ எம்) அனுமதி அளித்துள்ளது.

பல ஆண்டுகளாக துர்கா பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் புத்தகங்களை விற்பதற்கு கடைகளை மட்டுமே அமைத்து வந்தனர். ஆனால் இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பட்டாச்சார்யா அவரது தொகுதியில்  நடைபெறும் துர்கா பூஜைகளை தொடக்கி வைக்க உள்ளார்.

வெகுவான மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது முட்டாள்தனம் என்றார் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.

தமிழகத்திலும் கம்யூனிஸ்டுகள் இனி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.