ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ -க்கள் குஜராத் சட்டசபையில் ராஜினாமா

குஜராத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு, எம்.எல்.ஏ., தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

குஜராத்தில், முதல்வர்விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தல், வரும், 26ல் நடைபெற உள்ளது.இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்., – எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், மேலும் ஒரு காங்., – எம்.எல்.ஏ., தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராஜினாமா செய்த காங்., – எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்துள்ளதாக, சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, குஜராத் சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்கவைக்கு நான்கு உறுப்பினர்களை தேர்வு செய்யவேண்டிய நிலையில் எதிர்வரும் மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மூன்று வேட்பாளர்களையும், காங்கிரஸ் இரண்டு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய பலம் இருந்தபோதும் பா ஜ க மூன்றாவது வேட்பாளரை அறிவித்தது .

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஐந்து பேர் திடீரென ராஜினாமா செய்து அதிரவைத்தனர் . இரண்டு எம் பிக்களை சுலபமாக வெல்லலாம் என்று இருந்த நிலையில் ஐந்து எம் எல் ஏக்கள் விலகியதன் மூலம் காங்கிரஸின் பலம் பேரவையில் 68 ஆக குறைந்துள்ளது. ஆளும் பா ஜ க அரசின் பலம் 103 ஆக இருந்த நிலையில் பாரதீய பழங்குடியினர் கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவையும் ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏவின் ஆதரவையும் சேர்த்து 106 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் முதல் சுற்று ஒட்டு எண்ணிக்கையில் பாஜக இரண்டு இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் சுலபமாக வென்று விடும் இந்நிலையில் நான்காவது வேட்பாளருக்கு காங்கிரஸ் க்கு 34 ஓட்டுகளும் பா ஜ கவுக்கு 35 ஓட்டுகளும் கிடைக்கும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா ஜ க நான்காவது இடத்தை கைப்பற்றும் ஒருவேளை ஓட்டெடுப்பில் எதாவது தவறு நடந்து இரு வேட்பாளர்களும் சரிசமமான ஓட்டுக்களை பெற்று இருந்தாலும் இரண்டம் சுற்று ஓட்டெடுப்பில் பா ஜ க வின் 106 எண்ணிக்கையும் ஒருவருக்கு மொத்தமாக வாக்களிக்கும் அப்போது இரண்டம் சுற்று ஊட்டு பாதியாக கருதப்பட்டு ஓட்டுக்கள் 53 பா ஜ கவுக்கும் 34 ஓட்டுக்களும் காங்கிரஸுக்கும் கிடைக்கும் அப்போது நான்காவது இடத்துக்கான பா ஜ க வேட்பாளர் ஒட்டுமொத்தமாக 88 ஓட்டுகளை பெற்று வெற்றியையும் காங்கிரஸ் வேட்பாளர் 68 ஓட்டுக்கலாய் பெற்று தோல்வியையும் அடைவார். ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் இதேமாதிரியான ஒரு முயற்சியில் காங்கிரஸின் அகமது படேலை தோற்கடிக்க பாடப்பட்ட திட்டம் தேர்தல் கமிஷனராக இருந்த குரேசியின் ஆதரவோடு கட்சிமாறி வாக்களித்த இரண்டு காங்கிரஸ் எம் எல் ஏ க்களின் வாக்குகளை செல்லாது என்று அறிவித்து அகமது பட்டேலை வெற்றிபெற செய்தது குறிப்பிடத்தக்கது. இதே குரோஷிதான் ஒருவாரத்திற்கு முன்பு கொரோனா வைரஸ் பிரதமர் மோடியை பிடிக்கட்டும் என்று பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பெரிய மனிதர் மோடி மீதான வெறுப்பின் உச்சத்தில் உள்ள நபர் முன்னர் எப்படி நியாயமாக நடந்து கொண்டிருப்பர் என்பதனை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். கனகச்சிதமாக திட்டமிட்டு அமித்ஷாவால் நடத்தப்படும் இந்த தேர்தல் முடிவு யாருக்கு சாதகம் என்பது 26ம் தேதி இரவு தெரியவரும்.