மத்தியபிரதேசில் காங்கிரஸ் ஆட்சி ஊசலாட்டம்

காங்கிரஸின் 22 எம்எல்ஏ- க்கள் விலகிய நிலையில் இன்று கூடிய சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவு.

ஒரு கொரோனா நோயாளி இல்லாத மத்தியபிரதேசில் ஆட்சியை தக்கவைக்க சபாநாயகர் உதவியுடன் சட்டமன்றம் தள்ளிவைப்பு.

சட்டமன்றத்தை கூட்டிபெரும்பான்மையை நிரூபிக்க வழியின்றி முதல்வர் ஓட்டம்.

கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவை மீறி கொரோனா பாதிப்பை காரணம் காட்டி மார்ச் 26 வரை சபை ஒத்திவைப்பு.

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என வீரவசனம் பேசியவர்கள் புறமுதுகிட்டு ஓட்டம்.

சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க சபாநாயகருக்கு உத்தரவுகோரி முன்னால் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு, வழக்கு நாளை விசாரிப்பதற்கு நீதிமன்றம் முடிவு.

கவர்னர் பேச்சை தொடர்ந்து வேறு அலுவல் எதுவும் நடத்தாமல் பெருபான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் சட்டமன்றத்தை மார்ச் 26க்கு ஒத்தி வைத்தார் காங்கிரஸ் அரசின் சபாநாயகர்.

அன்றையதினம் 3 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதால் அதன் முடிவுக்கு பின்னர் பெரும்பான்மை நிரூபிக்க முயற்சி.