ஏ.பி.வி.பி கண்டனம்

பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் பியு கல்லூரியில் தங்களது மத வழக்கப்படி தலைப்பகை அணிந்து வந்த ஒரு சீக்கியப் பெண்ணை, கல்லூரிக்குள் நுழைய அந்த நிர்வாகம் மறுத்துவிட்டது. தலைப்பாகையைக் கழற்றிவிட்டு வரச் சொன்னது. மேலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை கடுமையாக கண்டித்துள்ள ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு, ‘உயர்நீதிமன்றம் சீக்கியர்களை கல்லூரிகளில் தலைப்பாகையைக் கழற்றச் சொல்லவில்லை. ராணுவம், வெளிநாடு உட்பட எந்த சீக்கியரையும் எந்த இடத்திலும் யாரும் தலைப்பாகையைக் கழற்றச் சொல்வதில்லை. சீக்கியர்கள் எல்லா இடங்களிலும் எப்போதும் தலைப்பாகை அணிவார்கள். மதப் பிரச்சாரத்திற்காக சிலர் செய்வது போல் அவர்கள் வசதிக்கேற்ப தலைப்பாகையை கழற்றவோ அல்லது அணியவோ மாட்டார்கள்’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.