ஏங்கிப் பாடினார், வாயிற்படி ஆகினார்!

சேர நாட்டு மன்னன் குலசேகரன் திருமாலின் பரம்பக்தன். பக்தியின் காரணமாக தனது அரச பதவியைத் துறந்துவிட்டு குலசேகர ஆழ்வார் ஆனார். இவர் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர்.

திருப்பதி வேங்கடவனின் மீது பக்தி கொண்டு பாடிய ஒரு பாசுரத்தில் எனக்கு உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை, திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, மரமாகவோ, பறவையாகவோ அல்லது திருவேங்கடவனின் கருவறைப் படியாகவோ இருந்து தினமும் பெருமாளின் அழகைத் தரிசிக்கும் வாய்ப்பைக் கொடு” என்று ஏங்கிப் பாடினார். அவரது வேண்டுகோள் பெருமானை உருக்கியது. அதனால் அவரின் பெயரால் குலசேகரப் படி என்று அழைக்கும் பேறு பெற்றார்.

இன்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் சன்னிதானத்தின் கருவறைப்படி ‘குலசேகரப் படி’ என்று அழைக்கப்படுகிறது. எல்லா பெருமாள் கோயில் வாசற்படியும் குலசேகரப் படி என்றே அழைக்கப்படுகிறது.

அவர் பாடிய பாசுரம்…

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே! வேங்கடவா! நின் கோயில் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாக் கிடந்து உன் பவளவா காண்பேனே

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்