எம்.பி மீது வழக்குப் பதிவு

சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி வெளியிடும் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஷபிகுர் ரஹ்மான் பர்க், ‘ராமர் கோயில் வலுக்கட்டாயமாக கட்டப்படுகிறது. கோயில் கட்டுவது சட்டத்திற்கு எதிரானது. பாபர் மசூதி தியாகம் செய்யப்பட்டு கோயில் கட்டப்படுகிறது’ என்று மற்றொரு சர்ச்சை கருத்தை சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. மசூதி கட்ட தனி நிலம் வழங்கப்பட்டது. ஆனால்,  ஷபிகுர் ரஹ்மானின் அறிக்கை, நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதுடன் ஹிந்து முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த புகாரின்பேரில் எம்.பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தலிபான்களுக்கு ஆதரவாக பேசியதாகவும் அவர் மீது டெல்லி காவல்துறையில் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.