“எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், லஞ்சம் வாங்குவது குற்றம்”: உச்சநீதிமன்றம்

 “எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் அவையில் பேசுவதற்கு அல்லது ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது குற்றம்” என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அவையில் பேசுவதற்கு, லஞ்சம் வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், லஞ்சம் வாங்குவது குற்றம் தான். பார்லிமென்ட், சட்டசபைகளில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும்.

விலக்கு அளித்து 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு அளித்த தீர்ப்பு முரணாக உள்ளது. சட்டசபை, பார்லிமென்டில் லஞ்சம் வாங்கும், அளிக்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. பார்லிமென்ட் சலுகையை பயன்படுத்தி எம்.பி, எம்.எல்.ஏ, க்கள் லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பு பெறுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.