எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆர்.எஸ்.எஸ் கொண்டாட இருக்கிறதா? ; பரதன் பதில்கள்

சுவாமிப் படங்கள் உள்ள பூஜையறையில் முன்னோர்கள் (காலமான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா) படங்களை வைக்கலாமா?

– திருப்பதி ராஜா, கோவில்பட்டி

சுவாமிப் படங்கள் வரிசையில் முன்னோர்கள் படங்களை வைக்காமல் தனியாக வைப்பது  நல்லது. என்னதான் இருந்தாலும் கடவுள் கடவுள் தான்.. மனுஷன் மனுஷன்தான்.

பொது  வாழ்க்கையில்  ஈடுபடுகிறவர்களுக்கு  ஆன்மிகம்  தேவையா?

– தெட்சண. பாஸ்கர், திருவையாறு

பொது வாழ்க்கையில் இருக்கிறவர்களுக்கு தடுமாற (பணம், பெண், பதவி) ஏராளமான சந்தர்ப்பங்கள் வரலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களைத் தடுமாறாமல் காப்பது ஆன்மிகமே.

– தீபா சௌந்தர், பண்ருட்டி

ஆர்.எஸ்.எஸ் கொண்டாடுமா என்று தெரியாது. ஆனால் விஜயபாரதம் சிறப்பு மலர் வெளியிட இருக்கிறது.

* ஹிந்து மதச் சடங்குகள் பற்றி தி.க.காரர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார்களே? எப்படி பதில் அளிப்பது?

– பா. முத்துச்சாமி, காங்கேயம்

எப்போதும் கேள்வி அவர்களே கேட்பதற்கு அவர்கள் என்ன வாத்தியாரா? பதில் சொல்வதற்கு நீங்கள் என்ன மாணவரா? கொஞ்சம் நீங்களும் அவர்களிடம் குண்டக்க, மண்டக்க என்று கேள்வி கேளுங்கள்.

தமிழகத் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் ரூ.1,000, 500 நோட்டு மாற்றத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவது ஏன்?

– வி. சரவணன், கடலூர்

பாதிக்கப்பட்டவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது நியாயம் தானே!

மணல் மாஃபியாவின் டிவி  ‡உஙிகு 7.

கல்விக் கொள்ளையன் டிவி  புதிய தலைமுறை.

அலைக்கற்றைத் திருடர்கள்  சன் டிவி.

மாமியார் – மருமகள் சண்டை என்பது எல்லா நாடுகளிலும் உண்டா?

– பிரவீணா பாஸ்கர், ஜோலார்பேட்டை

பரதனார் வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. யாராவது உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எல்லோரும் மனிதர்கள் தானே…!

* விஜய்  மல்லய்யாவின்  கடனை  தள்ளுபடி  செய்தது  சரியா?

– நாகை ராஜேந்திரன், சிட்லபாக்கம்

தள்ளுபடி செய்யவில்லை என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். வங்கிகள் வாராக்கடன் என்று அறிவித்தால் மட்டுமே நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்.அவர் வங்கிகளில் வாங்கியது 9,000 கோடி. அரசு அவரது சொத்துக்களை முடக்கியுள்ள மதிப்பு 9,661 கோடி. இவற்றை ஏலம் விட்டால் 20,000 கோடி வரை கிடைக்கும்.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.