எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராட்டங்கள் நடத்துவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் 150-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான பிரமோத் கோலி தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 154 பிரபலங்கள், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ராம்நாத் கோவிந்திடம் அவா்கள் அளித்தனா். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயக அமைப்புகள் காக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்