ஊடகத்தின் இழிநிலை வெட்கம் கெட்ட வக்கிரபுத்தி!

தமிழ் ஊடகங்களுக்கு என்று ஒரு நியாயம் எப்போதுமே உண்டு. அதன்படி ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை முன்னிட்டு இரண்டு நாட்கள் காதுகிழிய  விவாதம் செய்த அவை, வடகிழக்கு மாநிலங்கள் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி பற்றி எந்தவொரு விவாதத்தையும் பெரிதாக நடத்தவில்லை.

ஏதோ உலக மகா எளிமைக்காரர் மாணிக் சர்க்காரை திரிபுரா மக்கள் தோற்கடித்து விட்டார்களாம், புலம்பாத ஊடகங்கள் இல்லை. ஆண்டொன்றுக்கு அவரது ஹெலிகாப்டர் செலவு மட்டுமே ரூ.10 கோடி என்பதை மோடி கோட்டுக்கு கூப்பாடு போட்ட ஊடகங்கள் வெளியில் சோல்ல மறுத்தன. அதுமட்டுமல்ல, 20 ஆண்டுகால முதல்வர் தொகுதியில் ஒரு மருத்துவமனை இல்லை, கல்லூரி இல்லை என்ற விஷயங்களையும் கூற முன்வரவில்லை. நல்ல வேளை ரிபப்ளிக், டைம்ஸ் நவ், ஹிந்தி ஆகியன அவற்றை அம்பலப்படுத்திவிட்டன.

ஊடக தர்மத்தின் மற்றொரு விழுமியம் சிறுபான்மையினரின் பெரிய குற்றங்களை மூடி மறைப்பதும் பெரும் பான்மையினரின் சின்ன தவறுதலையும் கூட ஊதிப் பெரிதாகக்குவதும். அதன்படி எங்கோ உ.பி.யில் கொல்லப்பட்ட அக்லக்கிற்காகவும் குஜராத்தில் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட சிறுபான்மையினருக்காகவும் வாரக்கணக்காக, மாதக்கணக்காக கண்ணீர் வடித்த ஊடகங்கள் பாலேஸ்வரத்தில் பாதிரி தாமஸின் கருணை இல்லத்தில் கொன்று எலும்பு உருவப்பட்ட 1,590 முதியோர்களின் கொலை பற்றி வாயே திறக்கவில்லை. விதிவிலக்காக பாலிமரும் தந்தியும் சற்றே குரல் கொடுத்தன.  சின்னச் சின்ன தாக்குதல்களுக்கே விவாதம் நடத்திய தாங்கள் இப்போது இதற்கு ஏன் நடத்தவில்லை என்று கேட்டால் அதற்கான தேவை ஏற்படும்போது நிச்சயம் நடத்துவோம் என்று கூசாமல் பதில் தருகிறார்கள். 1,590 கருணை இல்ல கொலைகள் அவர்களுக்கு அந்தத் தேவையை ஏற்படுத்தவில்லை போலும், செதவர் கிறிஸ்தவ பாதிரி ஆயிற்றே!

திருச்செந்தூர் சம்பவத்தில் ஊடகங்கள் என்னவோ ஐயாக்கண்ணு பெரிய தியாகி போலவும் நெல்லையம்மாள் முரட்டுப் பெண்மணி போலவும் செதி சோல்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தக் காணொளியை ஒளிபரப்பும்போது நெல்லையம்மாள் மீதான வசவுச் சோற்கள் வரும் போது ‘பீப்’ சப்தம்  கொடுத்து அதனை கேட்கவிடாமல் செததுதான்.வெட்கப்பட வேண்டாமா நம் ஊடகங்கள்!

ஆண்டாளுக்கு பொங்காத ஊடகங்கள், ஹிந்துக் கோயில்களை இடிப்போம் என்றபோது பொங்காத ஊடகங்கள், ஹிந்து தெவங்களை செருப்பால் அடிப்பேன் என்று கிறிப்டோ கிறிஸ்தவர் ஒருவர் கூறிய போது பொங்காத ஊடகங்கள் ஹெச்.ராஜாவின் அட்மின்   திரிபுராவில் இன்று லெனின், தமிழகத்தில் நாளை ஈவெராவா?” என்று ராஜாவின் பக்கத்தில் பதிவிட்டபோது பொங்கி எழுந்தன. செதிகளாக, வசவுகளாக, விவாதங்களாக, மீம்சுகளாக பொங்கலோ பொங்கல்! இதில் வேடிக்கை என்னவென்றால் சில பேட்டியாளர்களுக்கு அடிப்படை அறிவே இல்லை என்பதுதான். வள்ளலார் நாத்திகம் பேசினாரே என்கிறார் ஒரு பேட்டியாளர்…!

ராஜா சர்ச்சையைத் தொடர்ந்து வேலூர் திருப்பத்தூரில் ஈவெராவின் சிலை ஒன்று சேதப்படுத்தப்படுகிறது. சேதப்படுத்தியவர்கள் இருவர்.  ஒருவர் பாஜககாரர். மற்றொருவர் இகஐ கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். பாஜககாரர் நீக்கப்படுகிறார். இகஐ என்ன செய்தது என்று கூட எந்த ஊடகமும் இன்றுவரை கேள்வி எழுப்பவில்லை. ஏன், அந்த மற்றொருவர் பற்றிய தகவலே தமிழ் ஊடகங்களில் சரியாக கொடுக்கப்படவில்லை.

தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக ஹரிஹரன் பொறுப்பேற்கிறார். அவ்வளவுதான். பாண்டே மீது ஏகப்பட்ட கட்டுக்கதைகள். தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவில்லாமல் தினகரனை ஆதரித்து அதிக செய்திகள் வெளியிட்டதால் பாண்டே விடுப்பில் அனுப்பப்பட்டதாக மட்டுமே தெரிகிறது. ஆனாலும் இடதுசாரி ஊடகங்களில் கொண்டாட்டம் எகிறுகிறது!

ராகுல் காந்தி கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில், ‘ஏசியா ரீ பான்’ என்ற புத்தகத்தை எழுதிய பி.கே.வாசு  ராகுலிடம் உங்கள் குடும்பத்தார் ஆளும்போது மட்டுமே  இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைவதும் மற்ற கட்சியினர் ஆளும்போது கூடுவதும் ஏன் என்று கேள்வி கேட்க ராகுல் பதிலளிக்க முடியாமல் திணறுகிறார். ஆனால் அக்கேள்விக்கு ராகுல் சிறந்த முறையில் பதிலளித்தது போல இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வலைதளத்தில் எடிட் செய்த ஒரு பதில் பதிவிடப்படுகிறது. உண்மை வெளிவர டுவிட்டர் ஆர்வலர்கள் இரண்டு வீடியோக்களையும் பதிவிட்டு காங்கிரசின் பொய் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். அதை தொடர்ந்து  எடிட் செய்த பகுதியை நீக்கா விட்டால் காங்கிரஸ் மீதும் ராகுல் மீதும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக இப்போது பி.கே வாசு எச்சரித்துள்ளார். பார்க்கலாம், என்ன நடக்கப் போகிறது என்று!

இவர்களது ஊழலுக்கு எதிரான போராட்டமும் அப்படிப்பட்டதுதான். சிதம்பதத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கைதை ஒரு தமிழ் ஊடகம் கூட  விவாதப் பொருளாக மாற்றவில்லை. மாறாக, இது அரசியல் பழிவாங்கும் செயல் என்று நாக்கூசாமல் பலரை வைத்து சோல்லி வந்தன.

அன்றும் சரி, இன்றும் சரி. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மோடி ஆகியோர் ஊடக ஆதரவற்ற நிலையில்தான் மிகுந்த மக்கள் செல்வாக்கோடு இருந்து வந்தனர் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வது நல்லது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் தானே! நமது ஊடகங்களும் அரசியல்வாதி போல வெட்கம் இல்லாமல் திரியத் துவங்கிவட்டன.