உஷார், அக்கம்பக்க ஆசாமிகள்!

எஸ்ஐஎஸ்’ என்பது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு. அதன் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த முசுரூதின் (28) என்பவன் திருப்பூரில் 6 மாதம் தங்கி அந்த அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையைச் செய்து வந்துள்ளான். அவன் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் அங்குள்ள காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளான்.

‘ஐஎஸ்ஐஎஸ்’ என்பது ஈராக் பகுதிகளில் தோன்றிய அமைப்பாகும். அங்குள்ள அரசோடு போரிட்டு சில பகுதிகளைக் கைபற்றி அந்தப் பகுதிகளை ‘இஸ்லாமிய அரசு’ என்று சொல்லிக்கொண்டது.

‘மதம் மாறு – வரி செலுத்து – அல்லது செத்துப்போ’ என்ற அவர்களின் முழக்கம் ஔரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்துகிறது. அந்த அமைப்பின் 2015 ஆண்டு வருமானம் சுமார் 6,700 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த கோடிகள் அனைத்தும் கொள்ளையடித்த பணமாகும். இஸ்லாமுக்கு ‘விரோதமான’ நினைவுச் சின்னங்களை அழிப்பது, வெளிநாடுகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது, பெண்களைப் பிடித்து பாலியல் அடிமைகளாக விற்பது இவை தான் அவர்களின் தொழில்.

எங்கெங்கோ வெடிகுண்டுகளை வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் அமைப்பு நம் திருப்பூருக்குள்ளும் வந்துவிட்டது என்பது அதிர்ச்சிகரமானது. திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்தோடு தங்கியுள்ளான். சந்தேகம் வராமல் இருக்க ஒரு மளிகைக் கடையும் நடத்தி வந்துள்ளான். வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் அவனிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் இருக்கிறது!

அன்றாடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் வேலை தேடி வருவதைப் பார்க்க முடியும். இந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஐஎஸ் உளவாளிகளும் ஊடுருவி வருகிறார்கள் என்றே தோன்றுகிறது.

காவல்துறை உஷாராக இருந்து இத்தகைய ஆபத்துகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். நமது பகுதியில் புதிதாக குடியேறுவோர்களை கண்காணிக்க வேண்டும். இதில் அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.