உன் மூளை அழுக்கு, அதை சலவை செய்கிறோம்!”

அன்புடையீர் வணக்கம்.

சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளம்வயது பெண் தற்கொலை செய்து கொண்டாள். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தாள். விடுதியில் தங்கியிருந்தாள். அவளுடன் அதே அறையில் தங்கியிருந்த மாணவியிடம் விசாரித்தபோது அவள் விடுமுறையில் ஊருக்குச் சென்று வந்தாள். அவளுக்கு திருமணம் முடிவாகி இருந்தது. ஏனோ அவள் கவலையுடனேயே இருந்தாள்” என்று தெரிவித்தாள். அவளுடைய பெட்டியை பார்க்கிறபோது அவள் முதல்வருக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் கிடைத்தது. அதில் எனது வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளாமல் கன்னியாஸ்திரீயாக இருந்து ஏசுவுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் எனது பெற்றோர்கள் எனது விருப்பத்திற்கு மாறாக எனக்கு திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள். எனக்கு திருமண வாழ்க்கையில் சிறிதளவும் ஆர்வம் இல்லை. அதனால் ஏசுவுக்கு ஊழியம் தானே செய்ய முடியவில்லை… ஏசுவுடனேயே ஐக்கியமாகிவிடுவது என்று நானே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. எத்தகைய மத உணர்வு? எந்த அளவுக்கு மூளைச் சலவை செய்திருக்க வேண்டும்? இத்தகைய மத போதை வேண்டாம். ஆனால் ஹிந்து குழந்தைகளுக்கு நமது மதத்தில் பக்தி என்ற உணர்வையாவது உருவாக்க வேண்டாமா?

வாழி நலம் சூழ.

ம. வீரபாகு,  ஆசிரியர்