இளநீர் என்றால் இளப்பமா?

ளநீர், இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும். இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும். பேதி, இரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு URINARY INFECTION போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

கோடைகாலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக்கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம். கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம் ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி. உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படும்.

* இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.

* புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது.ilanir

* இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.

* தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம், என்றும் நலமாய் இருப்போம்.

* இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.

* இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

 

சீரகக் குடிநீர்

சீரகத்தை நீரில்

கொதிக்க வைத்து, வடிகட்டி,

ஆறிய நீரை

தினம் பருகினால்

உடற்சூட்டைத்

தணிக்கும். இதயத்திற்கு

இதமானது

சீரகக் குடிநீர்.

 

வாழைத்தண்டு ஜூஸ்

சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும்,

இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

 

நீர்மோர்

மோரில் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகா,

உப்பு, பெருங்காயம்

எல்லாவற்றையும் அரை

தம்ளர் தண்ணீர் விட்டு

மிக்சியில் அரைத்து, வடிகட்டி, மோரில் ஊற்றி நன்றாகக்

கலக்கவும். இது நீர்மோர்.