இறைவனை மகிழ்விப்பது எப்படி?;- பரதன் பதில்கள்

சபரியைப் போல, நாமும் பழங்களை ருசிபார்த்து இறைவனுக்குப் படைக்கலாமா?

– வி.செல்வகுமரன்,திருத்துறைப்பூண்டி

நீங்களும் சபரி மாதிரி, கண்ணப்பர் மாதிரி பக்தி உள்ளவராக இருந்தால் படைக்கலாம். சாதாரண மனிதராக இருந்தால் நமது ஆசாரம் இதற்கு அனுமதி கொடுக்காது.

பெண்கள்   மஞ்சள்   பூசிக்   குளிப்பது   ஏன்?

– ரமாபிரசாத், ஹைதராபாத்

மஞ்சள் மங்களகரமானது. மஞ்சளில் கிருமிநாசினி இயற்கையாகவே அமைந்துள்ளது. பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் ஆரோக்கியமானது. கூடுமானவரை ஸ்டிக்கர் பொட்டைத் தவிர்ப்பது நல்லது.

இறைவனை   மகிழ்விப்பது   எப்படி?

– ரவிச்சந்தர், நேமத்தான்பட்டி

பசித்தவனுக்கு உணவு அளிப்பவன் உண்மையில் இறைவனுக்கே உணவு அளித்தவன் ஆகிறான். தன்னைச் சார்ந்த மக்களுக்கு உழைப்பதுதான் உண்மையான இறைவழிபாடு” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

பனாமா வங்கி” என்பது எங்குள்ளது? திடீரென்று அதன் பெயர் பத்திரிகைகளில்  அதிகமாக  அடிபடுகிறதே?

– என். குருசாமி, ஏனாதிமங்கலம்

இதுவரை கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் குவித்தார்கள். இப்போது அது சிரமமாக இருப்பதால் மத்திய அமெரிக்காவில் உள்ள ‘பனாமா’ என்ற நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தைப் பாதுகாக்கிறார்கள். அங்கு அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்பட 500 பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளார்கள்.

தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கு வை.கோ சொல்லும் காரணம் உண்மைதானா?

– மதுரா சுகுமார், வந்தவாசி

கருப்புக் கொடி காட்டியது நடிகர் கருணாஸின் புலிப்படையைச் சேர்ந்தவர்கள். அவர் அம்மாவின் திடீர் விசுவாசி, அப்படியிருக்கும் போது திமுக மீது பழி போடுவது எங்கேயோ இடிக்குது. எத்தனையோ கூட்டங்களில் அசால்ட்டாக பேசும் வை.கோ இதற்கு பதில் கூற இரண்டு பக்க அறிக்கை தயாரித்து படித்தது ஏன்? மக்கள் நல கூட்டணி ‘ஜெ’யின் ‘பி’ டீம் என்பது உறுதியாகிவிட்டது.

‘நோட்டா’விற்கு   ஓட்டு   போடலாமா?

– கே. நடராஜன், பெரம்பூர்

‘நோட்டா’ என்பது வேட்பாளர் இல்லை. தேச விரோத, ஜனநாயக விரோத நக்ஸல்பாரிகள்தான் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடாதீர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு பலியாகி விடாதீர்கள். அதனால் நாட்டிற்கோ உங்களுக்கோ பயன் ஏதுமில்லை. போட்டியிடுவதில் நல்ல கட்சி, நல்ல வேட்பாளர் யார் என முடிவு செய்து வாக்களியுங்கள்.

பரதனாரே… நான் பாஜகவின் நலன்விரும்பி. ஆனால் எனது தொகுதியில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லையே. அதனால் நான்    யாருக்கு    வாக்களிப்பது?

– ஹர்ஷிதா, காரைக்குடி

ஜெயிக்கிற கட்சிக்குத்தான் ஓட்டு போடவேண்டும் என்பதற்கு இது ஒன்றும் குதிரைப்பந்தயம் இல்லை. பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று தெரிந்தாலும் பாஜகவிற்கே வாக்களியுங்கள். திராவிடக்  கட்சிகளுக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கும் வேட்டாகவே கருத வேண்டும்.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.