இந்தியா டுடே நடவடிக்கை

இந்தியா டுடே குழுமத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்த துணைப் பொது மேலாளர் இந்திரனில் சாட்டர்ஜி, தனது முகநூல் கணக்கில் ‘திரௌபதி முர்மு ஆதிவாசி என்பதால் அவரை பாரதத்தின் ஜனாதிபதியாக ஏற்க முடியாது’ என்று கூறினார். மேலும், தன்னை பழமையானவர் என்றும், அதற்காகப் பெருமிதம் கொள்வதாகவும், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை எப்படி தான் ஆதரிக்கவில்லையோ அதேபோல, ஆதிவாசி ஜனாதிபதியையும் தான் ஆதரிப்பதில்லை என்றும் கூறினார்.  ‘சில நாற்காலிகள் அனைவருக்குமானது அல்ல, அவற்றுக்கு என்று ஒரு கண்ணியம் இணைக்கப்பட்டுள்ளது. துர்கா பூஜை செய்ய துப்புரவு தொழிலாளியை நாம் அனுமதிக்கிறோமா,  ஒரு ஹிந்து மதரஸாவில் கல்வி கற்பிக்க முடியுமா? ரப்பர் ஸ்டாம்ப் அரசியலமைப்புத் தலைவரை உருவாக்குவதில் ஆளும் கட்சியின் மலிவான சமூக, அரசியல் வித்தைகளே இவை. திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது, முன்னாள் குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, எஸ். ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், டாக்டர் ஷங்கர் தயாள் சர்மா, ராஜேந்திரன் போன்றவர்களை அவமதிக்கும் செயலாகும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கருத்து’ பதிவிட்டார். இத்தகைய இழிவான அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் அவர் தனது முகநூல் கணக்கை நீக்கிவிட்டார். எனினும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, இந்தியா டுடே குழுமம் அவரை பணிநீக்கம் செய்தது. மேலும், ‘இந்தியா டுடே குழுமம் இதுபோன்ற செயல்களை மன்னிப்பதில்லை. நெறிமுறைகள் மற்றும் தொழில்முறையில் மிக உயர்ந்த தரத்தை நாங்கள் நிலைநிறுத்துகிறோம்’ என தெரிவித்தது.