ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பண்புப் பயிற்சி முகாம்களில் தேச வழிபாடு கற்கும் தெம்புமிகு இளைஞர்கள்!

வட தமிழகத்திற்கான முதலாம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் முகாம்  நாமக்கலில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. முகாமின் துவக்க நிகழ்ச்சியை தாளாளர் நல்லதம்பியின் துணைவி சாவித்திரி அம்மாள் குத்துவிளக்கேற்றி தொடங்கினார். பின்னர் முகாம் வரவேற்புக் குழுவினர் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புக் குழுவின் துணைத்தலைவர் டாக்டர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். முகாமில் பயிற்சி பெறுபவர்கள் நடந்துகொள்ளும் முறைப் பற்றி மாநில இணைசெயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் விளக்கினார். மொத்தம் 203 ஸ்வயம்சேவகர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர். முகாம் அதிகாரியாக ஈரோடு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ராஜனும் முகாம் செயலாளராக காஞ்சிபுரம் பிரகாஷும் பொறுப்பேற்றுக்கொண்டு பயிற்சி முகாமை வழிநடத்தி வருகிறார்கள்.

 

ஆர்.எஸ்.எஸ்ஸின் தென் தமிழக பயிற்சி முகாம் (சங்க சிக்ஷா வர்க)  திருநெல்வேலியில் மேலதிடியூர், பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. மொத்தம் 431 பேர் இந்த முகாமில் பயிற்சிபெற்று வருகிறார்கள். இந்த முகாமில் சஹ பிராந்த  சங்கசாலக் ராமகிருஷ்ணன், வர்க அதிகாரி பாளையங்கோட்டை டாக்டர் டி.ராஜசேகர், ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரி முதல்வர் வைகுண்டம், வர்க கார்யவாஹ்  தெய்வப்பிரகாஷ், பி.எஸ்.என் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டி.ரகு, பிராந்த பிரசாரக் செந்தில்குமார், சக பிராந்த பிரசாரக் க. ஆறுமுகம், சக பிராந்த கார்யவாஹ் பவீதரன் உள்ளிட்டோர் வழிநடத்துகிறார்கள்.

 

 

 

பாரதப் பெண்ணே! நீ

காஷ்மீரியா? மணிப்புரியா?

பெண்கள் நினைத்தால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அது நல்லதோ கெட்டதோ எதுவானாலும் சரி. பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படங்களில் முதலாவது காஷ்மீரில் நமது ராணுவத்தினர் மீது கல்லெறியும் பெண்கள். இரண்டாவது மணிப்பூரில் சாலையில் சிக்கிய அரசுப் பேருந்தை மீட்கும் பெண்கள்.