ஆர்.எஸ்.எஸ் கண்டனம்

டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி, “குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. டில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள், நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதற்க்கு ஒப்பானது. தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.