ஆர்எஸ்.எஸ். சர்கார்யவாக் சுரேஷ் பையாஜி ஜோஷி

இன்றைய தேசிய சூழ்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து:   ஜனநாயகம் இரு தரப்பிற்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குகிறது. இரு தரப்புமே அவரவர் நிலையில் சரி என்றே நான் கருதுகிறேன். பேச்சுவார்த்தை மூலம் எது கிடைக்கிறதோ அதை ஏற்றுகொள்வது பற்றி போராடுபவர்கள் பரிசீலிக்க வேண்டும். தங்களால் என்ன தர முடியும் என்பதை அரசும் யோசிக்க வேண்டும். போராட்டங்களுக்கு நல்ல முடிவு ஒன்று எப்போதுமே இருக்கும். போராட்டத்திற்கு என்று உள்ள இடத்தை அது உணர வேண்டும், அரசும் தனது நிலைப்பாட்டை உணர வேண்டும். அரசு பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால், அதற்கு இடம் குறைவே, ஆனால் கேட்பவர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம்.
இந்த சட்டத்தில் தங்களுக்கு உள்ள ஆட்சேபனைகளை விவசாயிகள் அரசிடம் விவாதிக்க வேண்டும். அரசும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவே தோன்றுகிறது. இரு தரப்பிலும் இருந்தும் ஆக்கபூர்வ முயற்சிகள் இருக்க வேண்டும். போராடுபவர்களும் ஆக்கபூர்வ முயற்சி எடுத்தால், அது நன்மை பயக்கும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பிற பகுதிகளில் பெருமளவு ஆதரவில்லை. குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள். போராடும் விவசாயிகளிலும் கூட, சட்டத்தை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். போராடுபவர்கள் மத்தியிலேயே இருவித கருத்துக்கள் நிலவுகின்றன.

தேசியக் கல்விக் கொள்கை