ஆயுதங்களை ஒப்படைத்த ‘போடோ’ அமைப்பினர் – மோடி பாராட்டு

அசாமில், ‘போடோ’ அமைப்பை சேர்ந்த 1,615 பேர், அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனவாலிடம் ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்தனர். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், சில மாவட்டங்களில் போடோ உள்ளிட்ட மலைவாழ் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள், அசாமிலிருந்து தனியாக பிரித்து, போடோலாந்து என, தங்களுக்கென தனி மாநிலம் அமைக்க வேண்டும் என 40 ஆண்டுகளாக போராடி வந்தனர். போராட்டக் குழுவினருடன், மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதன் பலனாக, போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கும், அசாம் அரசுக்கும் சமீபத்தில் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், போராட்டம் நடத்தி வந்த, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த 1,615 பேர், இன்று (ஜன.,30) முதல்வர் சர்பானந்தா சோனவாலிடம், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்து, சரண் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சோனவால் பேசியதாவது:வன்முறையை கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்பியுள்ள உங்களுக்கு நன்றி. உங்களின் மறு வாழ்வுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். நாம் அனைவரும் சேர்ந்து, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக அசாமை மாற்றுவதற்கு கடுமையாக உழைப்போம். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன், அசாம் மாநில அரசும் சேர்ந்து உங்களுடன் இணைந்து போடோவை, வளர்ச்சிமிக்க பிராந்தியமாக மாற்றுவோம். போடோ சமூகம் வளர்ச்சி அடைந்தால், அசாமும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

மோடி பாராட்டு:

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், அசாம் மாநில அரசுக்கும், போடோ குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. இந்த முயற்சியால், அசாம், வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறும். போடோ குழுக்களை சேர்ந்த நண்பர்கள், வன்முறையை கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.