நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி 20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி

இந்திய நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி 20 போட்டி வெலிங்டன் நகரில் உள்ள ஸ்கை  ஸ்டேடியத்தில் நடைபெற்றது . முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி துவக்கத்தில் இருந்தே அடித்து விளையாடிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களையும் இழந்து வந்தது .  போட்டியின்  2வது ஓவரில் சாம்சன் 8 ரன்களிலும் 5வது ஓவரில்கேப்டன் கோலி 11 ரன்களிலும் 7வது ஓவரில் சிரேயஸ் ஐயர்  ஒரு ரன்னிலும் 9வது ஓவரில் ராகுல் 39 ரன்களிலும் 11வது ஓவரில் வாஷிங்டன்   சுந்தர்   ரன்எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தனர் .பௌளரான சர்துல் தாக்கூர் , மனிஷ் பாண்டே இணை சில ஓவருக்கு தாக்கு பிடித்தது. இந்த இணை ஓரளவுக்கு அதிரடியாக ஆடி ரன்களையும் எடுத்தது   ஆட்டநேர முடிவில் இந்திய அணி 165 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது இந்திய தரப்பில் மட்டையாளர்கள் எதிர்பார்த்த   அளவுக்கு ரன்களை எடுக்க வில்லை. புதிதாக வாய்ப்பு பெற்ற  ஸ்ராய்ஸ் ஐயரும் வாஷிங்டன் சுந்தரும் ஏமாற்றினர் .பின்னால் வந்த பௌலர்கள் ஓரளவுக்கு ரன்களை  சேர்த்ததால்  கவுரவமான  ஸ்கோரை எடுக்க முடிந்தது   சர் துல் தாக்குர்    20ரன்களை  சேர்த்து அவுட் ஆனார் அதிகப்பட்சமாக மனிஷ்பாண்டே  50 ரன்களை குவித்தார்    நியூசிலாந்து தரப்பில் இஸ்சோதி 3 விக்கெட் களையும் ஹமிஷ் பென்னட் ,குஜிலிங் , சாய்ன்டனர் தலா ஒரு விக்ட்களையும் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது காலின் மன்றோவும் டிம் சைபேர்ட்   அவ்வப்போது சிக்ஸர் களையும் பௌண்டரி களையும் விளாசினார் 15 ஓவருக்கு பின்னர் ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு போய்விட்டது போல் இருந்தது கடைசி ஓவரை வீசவந்த சர் துல் தாக்கூர் முதல் பந்தில் அபாரமாக விளையாடிவந்த ரோஸ் டைலரை வீழ்த்தினர். இரண்டாவது பந்தில் டேரி மிச்செல் 4 ரன் களை  அடித்தார் மூன்றாம் பந்தில் டிம் டின் சைபெர்ட்  ரன் அவுட் மூலம்   வீழ்ந்தார். நான்காம் பந்தில்  சாய்ட்ன ர் ஒரு ரன்னை எடுத்தார் ஐந்தாம்  டேரி மிச்செல் விக்கெட் வீழ்ந்தது கடைசி பந்தில்  சாய்ட்னர் றன் அவுட் செய்யப்பட்டார் . இந்த திரிலிங்கான    பந்து வீச்சின் மூலம் நியூசிலாந்தை திணறடித்து இந்திய பௌலர் சர்துல் தாக்கூர் போட்டியை சாமனில் நிறுத்தினார் . இதன் மூலம் போட்டி கடந்த  முறையை போன்று மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றது .
சூப்பர் ஓவரில் முதல் பந்தில் நியூசிலாந்து அணியின் தரப்பில் டின் சைபெர்ட்காலின் மன்றோ இணை எதிர்கொண்டது இந்திய தரப்பில் பும்ரா பந்து வீசினார்  சூப்பர் ஓவரின் முதல் பந்தில்   டின் சைபெர்ட் இரண்டு ரன்களையும்  இரண்டாவது பந்தில் நான்கு ரன்களையும் மூன்றாவது பந்தில் மீண்டும் இரண்டு  ரன்களையும் எடுத்து நான்காவது பந்தில் விக்கெட்டையும் இழந்தார் ஐந்து மற்றும் ஆறாவது பந்துகளை எதிர்கொண்ட காலின் மன்றோ முறையே நான்கு மட்டும் ஒரு ரன்னையும்  எடுத்தார் மொத்தத்தில் 13 ரங்களையெடுத்த நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 14 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது .
இந்திய தரப்பில் சூப்பர் ஓவரை  கேப்டன் விராட்கோலி லோகேஷ் ராகுல் இணை எதிர்கொண்டது முதல், மற்றும் இரண்டம் பந்துகளில் ஆறு மற்றும் நான்கு ரன்களை எடுத்த ராகுல் மூன்றாம் பந்தில்  விக்கெட்டை இழந்தார் நான்காம் பந்தை எதிர்கொண்ட கோலி இரண்டு ரங்களையும் ஐந்தாம்பத்தில் நான்கு ரங்களையும் எடுத்து இந்திய அணியை மீண்டும் வெற்றி பெறச்செய்தார்  5 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி பெரும் நான்காவது வெற்றி இது . எந்த சூழ்நிலையிலும் அணியின் வெற்றியை பற்றியே கவலைப்படும் இளைஞர் பட்டாளத்தை கொண்ட இந்திய அணிக்கு உள்ளூரில் மட்டுமே ஜெயிக்கும் அணி என்ற அவப்பெயர் கொஞ்ச காலத்துக்கு முன்னாள் இருந்து வந்தது அந்த அவப்பெயர் தற்போது மறைந்து வருகிறது இந்திய அணி வெளிநாடுகளிலும் உளநாட்டிலும் அசைக்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியின் வெற்றி பயணம்.தொடர்ந்து செல்லட்டும.