ஆபத்தான ஜூம் செயலி

ஜூம் செயலி அதன் பயனா ளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி சீன அரசுக்கு பகிர்ந்து கொண்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. சீன கம்யூனிச அரசு நிகழ்த்திய தியான்மென் சதுக்க படுகொலைகள்  சம்பந்தப்பட்ட வீடியோக்களை சில அமெரிக்கர்கள் பகிர்ந்துகொண்டபோது அவற்றை அந்த நிறுவனம் இடைமறித்துள்ளது. பல அமெரிக்கர்களின் கணக்கை எவ்வித விவரமும் கூறாமல் முடக்கிவிட்டது. சீன கம்யூனிச அரசின் கொள்கைகளை அது அமெரிக்காவில் செயல்படுத்த முனைகிறது. இது அமெரிக்க இறையான்மை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.