ஆபத்தான கம்யுனிஷம்

கர்நாடகாவில், ஆப்பிள் நிறுவனம் ஐ-போனை தயாரிக்கிறது ‘விஸ்ட்ரான்’ நிறுவனம். ஊதியப் பிரச்சனை, சம்பளக் குறைப்பு என கூறி தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தை அடித்து உடைத்துள்ளனர். அந்த நிறுவனம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 5,000த்தில் இருந்து 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், விஸ்ட்ரானுக்கு 450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை விசாரித்த தொழிலாளர் துறை, ஆவணங்களின்படி சம்பளம் சரியாக வழங்கப்பட்டுள்ளது என்கிறது. கம்யூனிஸ தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை குழப்பி, வன்முறை போராட்டத்தை தூண்டியதாக தெரிகிறது. இதே கம்யூனிஸ தொழிற்சங்கம்தான் சில மாதங்களுக்கு முன் டயோட்டா நிறுவனத்தை மூடியது. இதனால் 6,500 பேர் வேலை இழந்தனர். சீனாவுக்கு ஆதரவாக பாரதத்தில் உள்ள நிறுவனங்களை மூடுவதற்காக சதி செய்கிறது கம்யூனிஸ சங்கங்கள்.