ஆபத்தான ஒரு நிகழ்வு – கொரோனா பாதித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்

2020 ஏப்ரல் 17 மற்றும் 18ந் தேதி ஆங்கில நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை
அமைச்சகம், மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் நடத்திய மாநாட்டில் கலந்து
கொண்ட முஸ்லிம்களில் மியான்மரிலிருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களும் கலந்து
கொண்டுள்ளார்கள். மாநாடு முடிந்த பின்னர் மேற்படி ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்
தங்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் தேடி கண்டு பிடித்து கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை
நடத்தப்பட வேண்டும் என்பது தான் அந்த முக்கியமான செய்தியாகும்.
ரோஹிங்கிய முஸ்லிம்களை அகதிகளாக கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம் என மத்திய அரசு அறிவித்த
பின்னரும் கூட, சில மாநில அரசுகள் சட்ட விரோதமாக அவர்களுக்கு அடைக்களம் கொடுத்துள்ளன. முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, மறைமுகமாக பல மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், பர்துவான் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு கொண்ட பயங்கரவாதிகளில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களும் இருப்பதாக உளவு துறையின் அறிக்கை தெரியப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அறிக்கையில், ஹரியானா மாநிலம் மேவாட்டில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து
கொண்டவர்கள், டெல்லியில் நடந்த மாநாட்டிலும் கலந்து கொண்டார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள், இரண்டு
மாநாட்டிலும் பணிக்காக முன்னரே சென்றவர்கள். பஞ்சாப் மாநிலம் Dera Bassi யிலிருந்தும், ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தில்,ஜம்முவில் தங்கியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களும், தொலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில்
தங்கியிருந்த ரோஹிங்கிய முஸ்லிம்களும் கலந்து கொண்டும், கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கு தேவையான
காரியங்கள் செய்து கொடுக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் இன்னும தங்கள் அகதிகள் முகாமிற்கு திரும்பவில்லை என தெரிவித்திருந்தாலும், பலரும் திரும்பியதாகவே முஸ்லிம்கள் மத்தியில் தகவல்கள் வெளி வந்துள்ளன. எனவே இவ்வாறு திரும்பிய ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும் கொரோனா தொற்று நோய் பரவியிருக்க வாய்புள்ளது. ஆகவே மாநில அரசுகள் முறையாக கண்டு பிடித்து பரிசோதனை நடத்த வேண்டும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது .

தமிழகத்தில் கேளம்பாக்கத்தில் சட்ட விரோதமாக குடியுறியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் 96 பேர்கள்
இருப்பதாக கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் இரண்டு குடும்பம் மட்டுமே வந்த நிலையில், தற்போது 20
குடும்பங்கள் தங்கியுள்ளன. நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், தமிழ்நாடு உட்பட
ஜம்மு காஷ்மீரில் ஜம்முவில், ஹைதராபாத், மேவாட், டெல்லியில் ஷாகின்பாக் பகுதிக்கு அருகில் உள்ள பகுதியிலும், மேற்கு உத்திரபிரதேசத்திலும், ஜெய்பூரிலும் ஆயிரக்கணக்காணவர்கள் தங்கியுள்ளார்கள். இவர்கள் டெல்லியிலும், ஹரியான மாநிலம் மேவாட்டிலும் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டிற்கு பணியாற்ற சென்றவர்கள் என தப்லிகி ஜமாத் சார்பாக கூறப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆகவே ரோஹிங்கிய முஸ்லிம்களை முழுமையாக பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழ முக்கியமான காரணம், மலோசியா , பங்களா தேஷ் மற்றும் மியான்மர் நாடுகளில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகும். இரண்டு மாதங்களுக்கும் மேலாக கஷ்டப்பட்ட நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்களை பங்களாதேஷ் அரசு மீட்டு, கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்படுகிறது. இதே போல் மலேசியாவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகள் உட்பட சுமார் 200 ரோஹிங்கியா அகதிகளை ஒரு படகில் மலேசியா கடற்கரையில் இறக்கியதாகவும், , அவர்கள் கொரோனா வைரஸால் பாதித்திருக்ககூடும் என்ற அச்சத்தில். இருப்பதாக கூறினார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக மலேசிய விமானப்படை வியாழக்கிழமை பிற்பகுதியில் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், அதன் கண்காணிப்பு விமானம் ஒன்று முந்தைய நாள் வடக்கு தீவான லங்காவியில் இருந்து 130 கி.மீ தூரத்தில் படகைக் கண்டதாகக் கூறியது. இரண்டு கடற்படைக் கப்பல்கள் படகைத் தடுத்து, ரோஹிங்கியாக்களுக்கு
மனிதாபிமான அடிப்படையில் உணவை விநியோகித்ததாகவும் கூறியுள்ளார்கள்.

மேற்படி மலேசியா மற்றும் பங்களா தேஷ் நாட்டிலும் கொரோனா பாதித்த ரோஹிங்கிய அகதிகள் தப்லிகி
ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டார்கள், அவ்வாறு கலந்து கொண்டவர்கள் பல நாட்கள் கழித்தே அகதிகள் முகாமிற்கு திரும்பினார்கள் என அந்த அரசு கூறுகின்றது. சர்வதேச பொது மன்னிப்பு ஆனையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே மலேசியா கடற்கரை பகுதியிலும், தாய்லாந்தின் தெற்கு பகுதியிலும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் படகுகளில் கள்ளத்தனமாக ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் கொரோன தொற்றுக்கு ஆளாகியிருக்க கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டு, மனிதபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இதன் காரணமாக தான் இந்திய அரசும் பல மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள், ஹரியானவில் உள்ள மேவாட் மற்றம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டும், அங்கு வந்த முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் முழு பரிசோதனை நடத்த வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.