ஆந்திராவில் தொடரும் சிலை உடைப்பு, ஜெகன் மோகன் ரெட்டி புலம்பல்

கலியுகம் முடிவுக்கு வந்து விட்டதோ…

இந்து கோயில்கள் மீதும், சிலைகள் மீதும் நடைபெறும் தொடர் நாச வேலைகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி சட்டப்படி தண்டிக்கப்படுவர். மக்களின் மத உணர்வை தூண்டி விடும் இதுபோன்ற செயல்களால் யாருக்கு லாபம்? கலியுகம் முடிவுக்கு வந்து விட்டதோ என தோன்றும் அளவுக்கு குற்றங்கள் அதிகரித்து விட்டன. கடவுள் என்றால் பக்தி, பயம் இல்லாத காலம் வந்து விட்டது. கடவுளை வைத்து அரசியல் செய்யும் இந்த காலகட்டமே ஒருவேளை கலியுகத்தின் கடைசி காலம் என எண்ணத் தோன்றுகிறது. தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என்றார்.