ஆசாரத்திற்குப் பங்கமில்லை, மனிதாபிமானத்திற்கும் குறைவில்லை

தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் (1996). தொடர்ந்து அரசியல்வாதிகள், திரை உலகப் பிரபலங்கள் பற்றிய செதிகளையே கொடுத்துக்கொண்டிருந்த போது எனக்கு வித்தியாசமான யோசனை ஏற்பட்டது. ஒரு துறவியோடு நாள் முழுவதும் செலவிட்டு அந்த அனுபவத்தை பதிவு செயவேண்டும் என்பதுதான் என்னுடைய யோசனை. ‘ஜெயந்திரரோடு ஒரு நாள்’ என்பதுதான் தலைப்பு. அலுவலகத்தில் அனுமதி வாங்கி, காஞ்சிபுரம் போய் மடத்திலும் ஓகே வாங்கிட்டேன். சாதுர்மாஸ்ய விரதத்திற்காக ஏனாத்தூரில் தங்கியிருந்த ஜெயேந்திரரோடு ஒரு நாள் இருந்தேன். ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் நிறைந்த நாள் அது.

பக்தர்கள் வரிசையில் வந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டிருந்தார்கள். ஜெயந்திரருக்குப் பக்கத்தில் ஒரு இசைக் கலைஞர் வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். ஜெயேந்திரரும் ரசித்துத் தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் கேட்டேன். பெரியவாளுக்கு சங்கீதம் தெரியுமா?” அவர் சோன்னார், வாசிக்கிறவரின் சந்தோஷம் முக்கியம். நம்முடைய ஞானம் முக்கியம் இல்லை”.

பொதுவாகவே எடக்கு முடக்காக கேள்விகள் கேட்பது பத்திரிகையாளர் தர்மம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஜெயேந்திரரின் சிருங்கேரி விஜயம் பற்றிக் கேட்டேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர் சோன்னார். நான் சிருங்கேரிக்கு போகவேண்டும் என்பது மகாசுவாமிகளின் விருப்பம். அதை நிறைவேற்றும் வாப்பு எனக்குக் கிடைத்தது. அயோத்தி பிரச்சினை சிருங்கேரி மடத்தவர்கள் எங்களை முறையாக அழைத்தார்கள். நானும் உடன்பட்டேன். மகாசுவாமிகளும் சந்தோஷப்பட்டு சாரதாம்பாளுக்கு வெள்ளிச்சாமரம், வெண்பட்டுப்புடவை எல்லாம் கொடுத்து அனுப்பினார்கள்” என்று சோன்னார்.

ஜெயேந்திரரை புகைப்படம் எடுக்க சென்னையிலிருந்து ஒரு போட்டோகிராஃபரை அழைத்துப் போயிருந்தேன். துறவிகளுக்கு உபநிஷத் பாடம் எடுக்கும்போது படம் எடுப்பதாக ஏற்பாடு. முக்கியமான கட்டத்தில் போட்டோகிராஃபரைக் காணோம். அவரைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவருவதற்குள் உபநிஷத் பாடம் முடிந்துவிட்டது. என்ன செயலாம்?” என்று கேட்டார் ஜெயேந்திரர். பாடம் எடுக்காமல் சும்மா ஒரு போஸ் கொடுங்க படம் எடுத்துவிடலாம்” என்றேன் நான். உபநிஷத்துக்கெல்லாம் போஸ் கொடுக்கக்கூடாது. திரும்பவும் ஒரு பாடம் எடுக்கிறேன். படம் எடுத்துவிடு” என்று சோல்லிவிட்டு போட்டோகிராஃபர் மீது கோபமாக இருந்த என்னைச் சமாதானப்படுத்தினார்.

ஏனாத்தூரில் மதியழகன் என்பவரைச் சந்தித்தேன். மதிழயகனுடைய ஊர் ஊர் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரை கோயில் விஷயங்களில் ஊரார் சேர்த்துக்கொள்ளவில்லை. பிறகு ஜெயேந்திரர் தலையிட்டு ‘கும்பாபிஷேகம் மதியழகன் தலைமையில்தான் நடைபெறவேண்டும்’ என்று உத்தரவிட்டாராம். இதை நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் மதியழகன்.

சாதிமத வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துச் சென்ற துறவி ஜெயேந்திரர். சென்னை கடற்கரையில் உள்ள ஊரூர் குப்பத்தில் மீனவப் பெண் கொடுத்த பூர்ண கும்பத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார் அவர். தென் மாவட்டத்தில் உள்ள பல கோயில்களின் தலித் பூசாரி கொடுத்த பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டவர் அவர்.

ஹிந்து சமய மறுமலர்ச்சிக்காக பெரிய விழா எடுத்து அந்த விழாவில் அண்ணல் அம்பேத்கரின் உருவப் படத்தைத் திறந்துவைத்தவர் ஜெயேந்திரர். தமிழ்நாட்டு ஆன்மீகவாதிகள் வரலாற்றை எழுதும்போது ஜெயேந்திரரின் பெயர் நிச்சயமாக ஜொலிக்கும்.