ஆங்கிலம் மட்டுமே கல்வியாகாது…!

ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்து மாற வேண்டும். பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் சர்ச் சங்ககாலக் மோகன் பாகவத் கூறினார். பள்ளி கல்வியில் ஆன்மீகத்தையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வியறிவு இல்லாதவர்கள் கூட படித்தவருக்கு வேலை கொடுக்கிறார்கள். பள்ளி பாடப் புத்தகத்தை மாற்றுவதற்கான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வியில் ஆன்மீகத்தை சேர்க்க வேண்டும் என்று சொன்னால் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் பாடப்புத்தகத்தில் இதனோடு சேர்த்து மனிதநேயம், அறிவியல், பொருளாதாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பல  வளர்ந்த நாடுகளில் தாய் மொழியை மட்டுமே கற்று நன்கு ஊதியம் பெறும் வேலையில்  இருப்பதை பல நாடுகளில் காண முடிகிறது. மாணவர்கள் பிறரை நம்பி இல்லாமல் சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறுவதற்கு ஏற்றார்போல் கல்வி பாடத்திட்டம் இருக்க வேண்டும். அரசாங்கம் மட்டுமே கல்வியை மாற்ற முடியாது சமுதாயத்திற்கும் இந்த அக்கறை இருக்கிறது, சமுதாயம் பாடத்திட்டம் மாற வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் மாறியே தீரும்.