தீர்மானம் ஏதுமின்றி முடிந்த ஐ.நா. ஆலோசனைக் கூட்டம் – காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயன்ற பாகிஸ்தான், சீனாவுக்கு படுதோல்வி

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவு அடைந்தது. இதனால், காஷ்மீர் விவ காரத்தை சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயன்ற பாகிஸ்தானும், சீனாவும் தோல்வியை தழுவியுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி அதிரடியாக நீக்கி யது. அதுமட்டுமின்றி, காஷ்மீர் மாநி லத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்தியாவின் இந்த நடவடிக் கையை பாகிஸ்தான் கடுமை யாக எதிர்த்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, காஷ் மீர் விவகாரம் தொடர்பாக ஆலோ சனை நடத்த வேண்டும் என ஐ.நா. சபையிடம் பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந் தது. ஆனால், அந்நாட்டின் கோரிக் கையை ஐ.நா. ஏற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இதையடுத்து, வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள சீனாவின் நிர்பந்தத்தின்பேரில், ஐ.நா. பாது காப்பு கவுன்சிலானது காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் பங்கேற்றன.இந்த ஆலோசனைக் கூட்ட மானது வழக்கமாக நடைபெறும் அரங்கில் நடத்தப்படாமல், மூடப் பட்ட தனி அறையில் வைத்து நடைபெற்றது.

இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் சீனாவை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரி வித்தன.

பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு காரணமாக, இந்தியாவுக்கு எதிரான சீனாவின் வாதங்கள் இந்தக் கூட்டத்தில் எடுபடவில்லை. இதனால், எந்த வித தீர்மானமும், முடிவும் எட்டப் படாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன் சில் கூட்டம் நிறைவடைந்தது.

இது, சீனாவுக்கும் பாகிஸ் தானுக்கும் சர்வதேச அளவில் கிடைக்கப்பெற்ற தோல்வியாக கருதப்படுகிறது.