ஆக்டோபஸ் கைகளில் சினிமா உலகம்

ஹிந்துக்களின் கலாசாரத்தை அழிப்பதில் பெரும் பங்கு வகிப்பது சினிமாவும், சின்னத்திரையும். மக்கள் அதிகம் பார்ப்பதும், எளிதில் கிரகிப்பதும் இவைகளைதான். இதை புரிந்து கொண்டு தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைத்திருக்கின்றன ஹிந்து எதிர்ப்பு அமைப்புகள். கிருஸ்தவ மிஷனரிகள், முஸ்லிம் அமைப்புகள், கடவுள் மறுப்பு இயக்கங்கள், அர்பன் நக்ஸல்கள், திராவிட கட்சிகள் என இந்த பட்டியலின் நீளம் பெரியது. நடிகர்கள், இயக்குனர்கள் என அனைத்தும் இவர்களின் கட்டுப்பாட்டில். இவர்களை கொண்டே ஹிந்து கலாசாரத்தை அழிக்க முற்படுகின்றன இந்த அமைப்புகள்.
தற்கால படங்கள், தொடர்களை பார்க்கும் பொழுது, ஹிந்து வில்லன், கிருஸ்தவ நண்பன், தியாகம் செய்யும் முஸ்லிம், கடவுள் மறுப்பு வழிகாட்டி போன்ற பாத்திரங்களை முதலில் முடிவு செய்த பின்புதான் கதையே எழுதுவார்கள் போல தோன்றுகிறது. இந்த பொய்களை உண்மை என நம்பி சிலர் மயங்கி போகின்றனர். சிலர் சினிமா வேறு எதார்த்தம் வேறு என தெளிவாக உள்ளனர். ஹிந்து பாரம்பரியத்தை கடைபிடிக்கும் பலர் இவர்களை நம்புவதே இல்லை. பொய் பிரசார படங்கள் பலவும் ஓடாமல் பெட்டியில் முடங்குவதே இதற்கு சாட்சி. ஹிந்துக்கள் இவர்களது உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு, இதை போன்ற திரைப்படங்கள், தொடர்களை தவிர்ப்பது நலம். நல்ல படங்களும், தொடர்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றை தேர்ந்தெடுத்து பாருங்கள்.
குழந்தைகளுக்கு ஹிந்து மதத்தின் ஆழத்தையும், மேன்மையையும் புரியும் விதத்தில் எளிமையாக சொல்லித்தருவதுதான் இதற்கு நீண்டகால தீர்வாக இருக்கும்.