அழகான வழிமுறை

உபுன்டு என்னும் ஆப்பிரிக்க நாட்டு இனத்தில் யார் ஒருவர் தவறு செய்தாலும் அந்த தவறு செய்தவரை அவர்கள் ஊரின் மையப்பகுதிக்கு கூட்டிச் சென்று, இரண்டு நாட்களுக்கு அந்த ஊரில் வசிக்கும் ஒவ்வொருவரும் அந்த நபர் செய்த ஒவ்வொரு நல்லதையும் அவரிடமே சுட்டிக்காட்டி பேசுவார்களாம். அந்த இனத்தவரின் நம்பிக்கை என்னவென்றால் “ஒவ்வொரு மனிதனும் நல்லவன் தான், சில நேரம் தவறுகள் செய்யும் பொழுது அந்த மனிதன் அதில் இருந்து மீண்டு வரத் துடிக்கிறான். இப்படி அவன் செய்த நல்லவைகளை ஊரே சுட்டிக்காட்டி பேசுகையில் அவன் மீண்டு வந்து விடுகிறான்… “நல்லவனாக”..!

அடடா… எத்தனை அழகான ஒரு வழிமுறை? தப்பு ஒன்றை செய்த ஒருவனை அதில் இருந்து மீட்டு அவனை அந்த தவறை வெறுக்க வைத்து அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனை மீட்டு அவனுக்கே தருவது என்பதை விட அந்த மனிதனுக்கு வேறு ஒரு உதவியை யாரேனும் செய்து விட முடியுமா?

(இணையத்தில் இருந்து)