அள்ளி வீசுவது அடிமையாக்குவதே

கேரள மாநிலம் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கும் பிரஸ் கிளப்பிற்கும் கேரள அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதி கொடுத்துள்ளது. மேற்படி நிதியில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மிகப் பெரிய மோசடிகளை நடத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் படி முறை கேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தங்களின் மோசடிகளை மூடி மறைக்க, பத்திரிகை சுதந்திரம் எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கேரள அரசாங்க சி.பி.சி.ஐ.டி. பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  கடந்த ஏழு ஆண்டுகளாக ரூ 2 கோடியை அரசாங்கத் திடம் பெற்றுக்கொண்டு, எதற்கு நிதி பயன் படுத்தப்பட்டது என்பதற்கான விளக்கங்களையும் இன்றுவரை அரசாங்கத்திடம் கொடுக்கவில்லை.  2010-ல் கேரளத்தை ஆண்டு இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கம்,டெல்லியில் உள்ள பிரஸ் கிளப்பிற்கு ரூ25 லட்சம் கொடுத்துள்ளார்கள். எதற்காகவோ? இடதுசாரி ஆட்சியாளர்கள் செய்யும் படுகொலைகளையும் தேச விரோத சக்திகளின் கூட்டுக்கும் பங்கம் ஏற்படாமல் எழுத வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டது. இதிலும் ஒரு வேடிக்கை நடந்துள்ளது. அரசாங்கம் நிதி கொடுத்தது மட்டுமில்லாமல் சுமார் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மலிவான விலையில் வீடு வழங்கப்பட்டுள்ளது. கட்ட வேண்டிய தவணை தொகையை கட்ட தவறியவர்களுக்கு ரூ20 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலில், அரசாங்கத்திற்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆகவே கேரளத்தை ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர், தங்களின் தவறுகளை மூடி மறைக்க, பத்திரிகையாளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வளர்க்கிறார்கள். இவர்களைத் தான் ஆர்எஸ்எஸ். பற்றியும் அதன் சார்பு அமைப்புகள் பற்றியும் பொய்ப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இடதுசாரிகளின் ஆயுதம் ஊடகம் என்ற பார்முலா ரொம்பப் பழசு.