அலிகார்க் பல்கலை சிறுபான்மை நிறுவனமாக இருக்க முடியாது: மத்திய அரசு விளக்கம்

அலிகார்க் முஸ்லிம் பல்கலையின் தேசிய அந்தஸ்து காரணமாக, சிறுபான்மை நிறுவனமாக இருக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ள சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும், சிறுபான்மை நிறுவனமாக இருக்க முடியாது. எனவே அலிகார்க் முஸ்லிம் பல்கலை எந்த குறிப்பிட்ட மதம் அல்லது மதப்பிரிவைச் சேர்ந்தது ஆக இருக்க முடியாது. 1875 ல் நிறுவப்பட்ட இந்த பல்கலை, சுதந்திரத்திற்கு முன்பு கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருந்துள்ளது. இந்த பல்கலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த போதும், அதன் சட்டங்களும் கூட அலிகார்க் முஸ்லிம் பல்கலை அதன் தேசியத்தன்மையை உறுதி செய்கிறது எனக்கூறியுள்ளார்.