அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் 244-ஆவது சுதந்திரதினம் சனிக்கிழமை அன்று  கொண்டாடப்பட்டது. அதனையொட்டி தனது சுட்டுரை பக்கத்தில் அமெரிக்க அதிபா் டிரம்புக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா். அமெரிக்காவின் 244-ஆவது சுதந்திர தினத்தில் அந்நாட்டு மக்களுக்கும், அதிபா் டிரம்புக்கும் வாழ்த்துகள் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்தாா்.

பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அதிபா் டிரம்ப், ‘வாழ்த்துக்கு நன்றி நண்பரே. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது’ என்று தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டாா்.