இயற்கை பேரிடரால் அடிபட்ட சீனா, இனியாவது திருந்துமா?

சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. கல்வான் பகுதியில் இருந்து, படைகளை சீனா இன்னும் வாபஸ் பெறவில்லை. குறிப்பாக, கல்வான் பகுதியில் நான்கு இடங்களில், சீனா, படைகளை குவித்துள்ளது. மேலும், எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில், இந்திய பகுதியை ஒட்டி, கட்டுமானங்களை சீனா மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கல்வான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும், ஆற்றில் பனி கட்டிகள் அதிகளவில் வருகின்றன. இந்த நதி கரையை ஒட்டியே, சீன படையினர் முகாமிட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் தாக்குப் பிடிக்க முடியாமல், சீன படையினர் திகைத்து போய் உள்ளனர். இதனால், சீன படையினர் வாபஸ் பெற்றாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி செய்த ஆக்கிரமிப்பு, நாட்டு ராணுவத்திற்கே சிக்கலாக மாறியுள்ளதாக, சீனாவில் சர்ச்சை எழுந்துள்ளது.