அப்துல் கலாம் வாழ்வில்

• தாய்மொழியான தமிழில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்.
• பாரத ஜனாதிபதிகளில் மிக எளிமையாக வாழ்ந்தவர் இவர்.
• நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் தேசப்பற்று ஏற்பட செய்தவர்.
• ‘கனவு காணுங்கள்’ என்பதை மாணவர்கள் மத்தியில் பிரபலமாக்கியவர்.
• அப்துல்கலாம் இளம் வயதில் விமானியாக வேண்டும் என ஆசைப்பட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில்நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
• பொக்ரானில் பாரதம் அணுகுண்டு சோதனை நடத்த அடித்தளம் அமைத்தவர்.
• பாரத ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல்கலாம் திட்ட இயக்குனராக இருந்தபோது வடிவமைக்கப்பட்டவை.
• போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த செயற்கை கால்கள், இருதய நோயாளிகளுக்கான விலை குறைந்த ஸ்டெண்ட் கருவிகளை உருவாக்கினார்.
• இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல்கலாம் விரும்பினார். மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
• அப்துல்கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
• அப்துல்கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
இன்று அப்துல்கலாம் பிறந்த தினம்