அதிரடி, பிறகு அடிமேல் அடி

சென்ற ஆண்டு மியான்மருக்குள் புகுந்து பயங்கரவாதிகளை பலிபோட்டுத் திரும்பியதை நினைவுபடுத்தும் வகையில், பாரத ராணுவ கமாண்டோ அணி, பாகிஸ்தான் ஊட்டி வளர்க்கும் பயங்கரவாதிகளின் முகாம்களை துவம்சம் செதுவிட்டு, பாசறை திரும்புவதற்குள் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பாரதத்தின் செயலை ஆதரித்து அறிக்கை வெளியிட்டன. எந்த ஒரு நாடும் எதிர்க்கவில்லை என்பதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரஜ் சுட்டிக் காட்டினார்.

பாகிஸ்தானில் நடக்க இருந்த ‘சார்க்’ மாநாட்டுக்கு வரமாட்டோம் என்று ஏழில் ஐந்து நாடுகள் (இலங்கை உள்பட) அறிவித்து பாகிஸ்தானின் மூக்கை உடைத்தன. மாநாடு ரத்து செயப்பட வேண்டியதாயிற்று. திட்டமிட்டபடி பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது.india-terror-action

இந்தியர்கள் எங்களை அடித்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் ஊர் நடுவில் ஒப்பாரி வைக்கக்கூட முடியாது. பாரத கமாண்டோக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள்தான் (அதாவது பாரத மண்) போவிட்டு வந்தார்கள். சார்வதேச எல்லையைத் தாண்டவில்லை. எனவே இது போர் அல்ல.

பாகிஸ்தான் அரசுத் தரப்பில் ‘சர்ஜிக்கல் தாக்குதல்’ ஒன்றும் நடக்கவில்லை என்று மழுப்பல் வெளியான சில மணி நேரத்தில் ’டான்’ என்ற பாகிஸ்தான் நாளிதழ், வந்த இந்திய வீரர்களில் ஒருவரைப் பிடித்துவைத்திருக்கிறோம் என்று புருடா விட்டு தனது அரசையே காலைவாரியது. குழப்பக் கோட்டை ஆனது பாகிஸ்தான்.

பாரத அரசு எவர் சான்றிதழையும் நாடவில்லை என்றாலும் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாரதத்தின் நடவடிக்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவுதருகின்றன.

உரீ தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செவது பற்றி பாரத அரசு பரிசீலித்து வருகிறது என்ற தகவலே பாகிஸ்தானுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கப் போதுமானதாக இருந்தது. பிறகு பாகிஸ்தானாவது, தனது அணுகுண்டு விசை மீது கைவைப்பதாவது?