பா.ஜ.க. எதிர்கட்சியாக இருந்தபோது

பாரதிய ஜனதா கட்சி எதிர்க் கட்சியாக இருந்த போது, நாட்டின் பாதுகாப்பு கருதி,   இந்திய சீன யுத்தத்தின் போது,  தாய் நாட்டிற்கு ஆதரவாக பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, லோகிய உள்ளிட்டவர்கள் சார்பாக அடல்பிகாரி வாஜ்பாய், நாடாளுமன்றத்தில் சீனா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததை முழு மனதுடன் ஆதரித்தார். 1993-ல் ஜெனிவாவில் நடந்த ஐ..நா. சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு முட்டுக் கட்டை போட்டவர்.

ஜெ உயிருடன் இருந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பார் என சென்னையில் மோடி கூறியதை அண்டப்புளுகு என்று ஸ்டாலின் அநாகரிகமாகப் பேசுகிறார்.

மத்தியில் ஆட்சியிலிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக விவாதம் நடந்தபோது, தயாநிதி மாறன் பதவியைவிட்டுச் செல்லும் போது, இரண்டாமிடத்திலிருந்த பி.எஸ்.என்.எல்.   பழைய டெண்டர்களை ரத்து செய்து விட்டு, புது டெண்டர் விடாமலே, கருவிகளே வாங்காமல், புதிய இணைப்பும் தராமல் தனியாருக்கு சாதகமாக இருந்து விட்டு,  நான்காமிடத்திற்கு தள்ளப்பட்டு, முதலிடத்தில் இருப்பதாக பொது மக்கள் மத்தியில் பேசிய தி.மு.க.வினர்தான் அண்டப்புளுகர்கள்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என முழக்கமிட்டவர்களின் ஆட்சியில் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில், தனியார் மருத்துவமனை கொள்ளையடிக்க வழி வகை செய்யப்பட்டு, தங்கள் குடும்பம் 700 கோடி கொள்யைடிக்க வழி வகுத்தவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என கூறியது அண்டப்புளுகு இல்லாமல் வேறு என்ன?