மோடி அரசு மகளிர் முன்னேற்றத்திற்கான அரசு

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பெண் பிரதிநிதிகள் விபரம்:

  • 5 மத்திய கேபினட் அமைச்சர்கள்
  • 2 மத்திய இணை அமைச்சர்கள்
  • 7 கவர்னர்கள்
  • 9 மாநில கேபினட் அமைச்சர்கள்
  • 8 மாநில இணை அமைச்சர்கள்
  • 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
  • 7 ராஜ்யசபா உறுப்பினர்கள்
  • 114 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்

பெண்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்

பிரதமர் மோடி அரசால் பெண்களுக்கு அடுப்புப் புகையில்லா வாழ்க்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகப் பெண்கள் 27 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து கிராமப்புற வீடுகளிலும், பள்ளிகளிலும் அரசு மானியத்துடன் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. திறந்தவெளி மலம் கழிப்ப தால் தொற்று நோய் ஏற்படும். அதனால் ஏற்படும் இறப்பு கழிவறை உபயோகிப்பதால் குறைந்துள்ளது.

முத்ரா கடன்

சிறு / குறு தொழில் புரிபவர்கள் தொழில் அபிவிருத்தி செய்ய அல்லது தொழில் துவங்க எந்தவித உத்தரவாதமும் பெறாமல் ஏழை, எளிய சிறு வியாபாரிகளுக்கு வங்கி மூலம் 50,000 ரூபாய் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அதிகம் பயன் அடைந்தோர் தமிழகப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகப்பேறு விடுப்பு

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

தாய்சேய் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் பா.ஜ.க. அரசாங்கம் என்பதற்கு இதுவே சான்று.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

பெண் குழந்தைகளை படிக்கவைப்போம்

இத்திட்டத்தின் மூலம் பெண் சிசுவதை தடுக்கப்படவேண்டும்.

பெண்குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகளை நன்றாக போற்றி வளர்க்க வேண்டும் எனும் விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகள் படிப்பு மற்றும் திருமணத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அதிக வட்டியுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜன்தன் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் முதல்முறையாக வங்கிகளில் பெண்கள் அதிகமானோர் ஜீரோ  பேலன்ஸ் கணக்கு துவக்கினார்கள்.

வருடத்திற்கு ரூ.6.12 செலுத்தினால் ரூபாய் ஒரு லட்சத்திற்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படும் திட்டத்தில் லட்சக்கணக்கான தமிழக மகளிர் சேர்ந்துள்ளனர்.

காப்பீடுகள்

வருடத்திற்கு ரூ.330 செலுத்தினால் ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பீட்டு திட்டத்திலும் அதிக அளவிலான பெண்கள் சேர்ந்துள்ளனர்.

திறன் இந்தியா SKILL INDIA திட்டத்தின் மூலம் மகளிர் திறன் மேம்பாட்டிற்கான பல்வேறு பயிற்சிகள் ஊக்கத்தொகையோடு அளிக்கப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பு

சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனை வழங்க மோடி அரசு சட்டம் இயற்றியுள்ளது.

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின்கீழ் பெண்கள் பெயரில் வீடு கட்ட பொருளாதாரத்தல் பின்தங்கியவர்களுக்கு மோடி அரசு முன்னுரிமை கொடுத்து மானியத்துடன் கடன் வழங்குகிறது.

மக்கள் மருந்தகங்கள்

சாதாரண மக்களுக்கு 500 வகையான தேவைப்படக்கூடிய மருந்துகள் மலிவு விலை யில் கிடைக்க ‘பிரதமர் ஜன ஒளஷதி’ திட்டம் வழிசெய்கிறது. இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘இந்திர தனுஷ்’ திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக தடுப்பூசி, மருத்துவர் ஆலோசனை ஆகியவை வழங்கப்படுகிறது.

இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மகளிர் வளர்ச்சிக்கும் மகளிர் பாதுகாப்பிற்கும் உரிய அரசு மோடி அரசு.

‘‘பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்’’ எனும் கொள்கை கொண்ட மோடியின் மத்திய பா.ஜ.க. அரசாங்கம்தான் பெண்களின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக உள்ளது. மோடி அரசே மீண்டும் வேண்டும்.