ஆம்பூர் உருதுப் பள்ளியில்

ஆம்பூர், தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்குள்ள  முஸ்லிம்கள்   சிலர்  ஆப்கானிஸ்தானிலோ அல்லது பாகிஸ்தானிலோ இருப்பதைப்போல தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் கற்பிக்கப்படவேண்டும், தமிழில் தேர்வு எழுதவேண்டும் என்பது தொடர்பாக மாநில அரசு 2006 ஆண்டே உத்தரவு பிறப்பித்தது. தமிழ்மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்ந்தோங்க வைக்கவேண்டும் என்ற அடிப்படையில் அரசு இந்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் உருது பேசும் முஸ்லிம்கள் இதை ஒருபொருட்டாக கருதவில்லை.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் கூட இதை அமலாக்கவேண்டும் என்பதில் முஸ்லிம் புள்ளிகளுக்கு துளியும் அக்கறையில்லை. உருதுப்பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களின் மாணவர்களும் பெற்றோர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விலக்கு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.  சென்னை உயர்நீதிமன்றம் ஓர் ஆண்டு மட்டுமே விலக்கு அளித்தது. இதற்குப் பிறகு விலக்கு அளிக்கமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

கொதிநிலை உச்சம் பெற்று வரும் நிலையிலும், முஸ்லிம்  பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் நிரந்தர விலக்குக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஆம்பூரில் உள்ள சி.பி.எஸ்.சி. உடன் இணைக்கப்பட்ட மசருல் உலூம் கல்லூரியில் தமிழை கட்டாயப்பாடமாக்கக் கூடாது, தமிழில் தேர்வு நடத்தக்கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட  மாணவர்கள் பள்ளிக்கூடத்தை புறக்கணித்து விட்டு வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டம் எதற்காக? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழை படிக்கமாட்டோம் தமிழில் தேர்வு எழுதமாட்டோம் என்று சொல்வதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்?  இந்த நஞ்சு மனப்பான்மையை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழை காப்பதற்காகவே நாங்கள் அவதரித்துள்ளோம் என்று வாய்ப்பந்தல் போடும் பல்வேறு திராவிடச்சார்புடைய கட்சிகளும் முஸ்லிம் பள்ளிக்கூடத்தை இடித்துரைக்க முன்வரவில்லை. இந்த ஆண்டு தமிழில் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது. இந்த உறுதியே இறுதியானதாக இருக்கவேண்டும். அடுத்த கல்வியாண்டில் இருந்தாவது தமிழில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டும். இல்லையெனில் தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயிரில் நடமாடும் போலி நபர்களை அவர்களது நிழல்கள் கூட மதிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *