நாடு முழுவதும் ஜிகாதிகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும், நாடு முழுவதும் 11 இடங்களில் இத்தகைய தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. செப்டம்பர் 19ம் தேதி பிஹாரில் உள்ள பூர்ணியாவில் துர்கா தேவியின் சிலையை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கினார். செப்டம்பர் 21ம் தேதி, மஹாராஷ்ட்ராவில் உள்ள ரோகிணியில் துர்கா தேவியின் சிலை கலங்கப்படுத்தப்பட்டது.
ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள பாரதத்தில் விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை, ராமநவமி உள்ளிட்டவற்றையொட்டி, ஹிந்துக்கள் ஊர்வலமாகச் செல்ல ஜிகாதிகள் எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். அவர்களது அத்துமீறலும், அடாவடித்தனமும், அட்டூழியமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இப்பின்னணியில் அண்மைகால நிகழ்வுகள் சிலவற்றை உன்னிப்பாக உற்று நோக்குவோம். அக்டோபர் 4ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள மாலாக்பேட் பகுதியில், துர்கா தேவியை விசர்ஜனம் செய்வதற்கான ஊர்வலத்தை ஹிந்துக்கள் நடத்தினார்கள். துர்கா தேவி மீது அழுகிய தக்காளிகளையும், துர்நாற்றம் வீசும் முட்டைகளையும் ஜிகாதிகள் சரமாரியாக வீசி எறிந்தார்கள். ஹைதராபாத் நகரமே போர்க்களமானது. சில நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளது. ஜிகாதிகளின் அட்டூழியங்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு முன் விநாயகர் விசர்ஜனத்தின் போதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமநவமியின் போதும் இவ்வாறு அழுகிய முட்டைகள் வீசப்பட்டதை மறந்து விட முடியாது. இது தற்செயலான நிகழ்வு அல்ல. விஷமத்தனமான உள்நோக்கத்தின் அடிப்படையில் இவை தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாலாக்பேட் பகுதியைச் சேர்ந்த பல்தான் என்ற இடத்தில் விநாயகர் விசர்ஜனம் நடைபெற்றது. அப்போது சரமாரியாக அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, இவ்விவகாரத்தை முடித்து வைத்து விட்டார்கள்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., எம்.எல்.ஏ அகமது பின் அப்துல்லா பலாலா சம்பவ இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், துர்கா தேவி மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்ட விவகாரத்துக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் அரசு இருக்கும் வரை தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், முற்றிலுமாக பொய்த்துப் போய் விட்டது.
தெலுங்கானாவிலும் அதன் தலைநகரான ஹைதராபாத்தில்தான் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. நாடு முழுவதும் ஜிகாதிகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும், நாடு முழுவதும் 11 இடங்களில் இத்தகைய தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. செப்டம்பர் 19ம் தேதி பிஹாரில் உள்ள பூர்ணியாவில் துர்கா தேவியின் சிலையை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கினார். இதை தடுக்க முயன்ற பிரகாஷ் பஸ்வான் என்பவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர் 21ம் தேதி, மஹாராஷ்ட்ராவில் உள்ள ரோகிணியில் துர்கா தேவியின் சிலை கலங்கப்படுத்தப்பட்டது. ஜிகாதிகளின் இந்த கொடூர நிகழ்வால், அப்பகுதியே போர்க்களமானது. செப்டம்பர் 24ம் தேதி குஜராத்தில், ராஜிபில்லாவில் ஹிந்து பக்தர்கள் ஜிகாதிகளால் தாக்கப்பட்டார்கள். நாங்கள் மகாதேவரை நேசிக்கிறோம், பூஜிக்கிறோம் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஹிந்து பக்தர்கள் ஏந்தி இருந்தனர். இதை ஜிகாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுதான் பிரச்சினைக்கு மூலக் காரணம். கலவரத்தின் போது, பல கடைகள் சூறையாடப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. காவல்துறை வாகனமும் இதில் அடங்கும்.
செப்டம்பர் 27ம் தேதி, சத்தீஸ்கரில் உள்ள பிலாயில் ஹிந்து பக்தர்களை ஜிகாதிகள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். செப்டம்பர் 28ம் தேதி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சரவஸில் துர்கா தேவி பூஜை பந்தலை ஜிகாதிகள் தாக்கினார்கள். ஹிந்து பெண்கள் கதறிக் கொண்டும், பதறிக் கொண்டும் அங்கிருந்து ஓடியக் காட்சி வைரலானது.
அக்டோபர் 1ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள டன்டா, ரேபரேலி ஆகிய இரண்டு இடங்களில் ஹிந்து பக்தர்களை ஜிகாதிகள் சரமாரியாகத் தாக்கினார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் திந்தோரியில் அக்டோபர் முதல் தேதி, துர்கா தேவி விசர்ஜனத்தின் போது, ஜிகாதிகள் வன்முறையில் ஈடுபட்டார்கள். காவல்துறையின் பூரணப் பாதுகாப்புடன் விசர்ஜனம் சிறப்பாக நடைபெற்றது. அக்டோபர் 4ம் தேதி மகாராஷ்ட்ராவில் உள்ள துல்ஜாப்பூரிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஸாடோலிலும், ஒடிசாவில் உள்ள கட்டாக்கிலும் துர்கா தேவி விசர்ஜனத்தின் போது ஜிகாதிகள் தாக்கினார்கள். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் 5 வேளை தொழுகையின் போது, மசூதிகளில் உரத்தக் குரலோசை ஏற்படுகிறது. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஜிகாதிகள், ஹிந்து விழாக்களின் போது ஒலி அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்புவது, இரட்டை வேடமாகும், போலித்தனமாகும். பாரதத்தில் விழிப்பும், எழுச்சியும் உயர்ந்தோங்கி வருகிறது. இரட்டை வேடத்துக்கு எதிர்கால பாரதம் முற்றுப்புள்ளி வைத்தே தீரும்.
கட்டுரையாளர்: ஆர்கனைசர் செய்தியாளர் குழு
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி