இந்தியாவில் Digital Payments 2016ல் தொடங்கியபோது, அதன் நடைமுறை சாத்தியம் குறித்து நாடாளுமன்றத்திலேயே கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், கிராமங்களில் இருக்கும் சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள் எப்படி இணைய வசதியில்லாமல் Digital Payment செய்வார்கள் என்ற கேலியுடன் கேள்வியை எழுப்பினார்,
ஆனால் இன்று?
கீரை விற்கும் பாட்டி முதல் பெரிய Shopping Mall வரை UPI பயன்படுத்துகிறார்கள். இந்த 6,7 வருடத்தில் கிட்டத்தட்ட 50 கோடி மக்களுக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனையை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
உலகிலேயே பெரிய டிஜிட்டல் கட்டுமானமாகி விட்டது UPI. இந்திய அரசின் இந்த வெற்றியைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. இன்றைய தினம் பல நாடுகள், இந்த அமைப்பில் இணைய கோரிக்கை வைக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில்தான் UPI-க்கு MDR (மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட்) என்ற புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் ஒரு விவாதம்.
“UPI infrastructure தொடர்ந்து வளர ஒரு சிறிய கட்டணம் அவசியம்” என்கிறது ஒரு தரப்பு. “இவ்வளவு நாள் இலவசமாக இருந்த UPI-யையும் ஏன் கட்டணமாக்க வேண்டும்?” என்கிறது இன்னொரு தரப்பு. இந்த விவாதத்தை பயன்படுத்தி, UPI பற்றி முதலில் கேலி செய்த அரசியல் கட்சிகள், இன்று இந்த அறிவிப்பை மிகப்பெரிய சர்ச்சையாக மாற்ற பல முயற்சிகளை செய்கிறார்கள். நாம் முதலில் இந்த அறிவிப்பை முழுமையாக புரிந்து கொள்வோம், பின்னர் இந்த அறிவிப்பு ஏன் அவசியமாகிறது? என்று பார்ப்போம்.
MDR என்றால் என்ன? யார் செலுத்த வேண்டும்? எப்பொழுதிலிருந்து நடைமுறை ?
அக்டோபர் 15 முதல் அமலாக்கப்படும் MDR, என்ன என்று முதலில் பார்ப்போம்: MDR என்பது வரி அல்ல; அரசு மக்களிடம் வசூலிக்கும் கட்டணமும் அல்ல. ஒரு வியாபாரி Digital Payment-ஐ ஏற்றுக்கொள்ள உதவும் Payment Infrastructure மற்றும் சேவைகளுக்காக Merchant தரப்பில் வசூலிக்கப்படும் சேவை கட்டணம்.
அடுத்தது P2P – Person to Person என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்கள் உங்கள் அப்பாவுக்கோ, நண்பருக்கோ உங்கள் மனைவிக்கோ, சகோதரருக்கோ பணம் அனுப்புகிறீர்கள் என்றால், அது P2P Transactions. அத்தொகை எவ்வளவாக இருந்தாலும் MDR கிடையாது. தொடர்ந்து இலவசம்தான். அடுத்தது வியாபாரிகளுக்கு செய்யப்படும் Payment. 2,000 வரை Merchant-க்கு UPI மூலம் செலுத்தினாலும் MDR கிடையாது.
மேலும் UPI QR மூலம் மாதத்திற்கு ₹1 லட்சம் வரை பெறும் Street Vendors உள்ளிட்ட குறிப்பிட்ட Small Merchants-க்கும் Zero-MDR பாதுகாப்பு தொடர்கிறது.
அப்படியானால் யாருக்கு MDR?
₹2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட P2M Person to Merchant transactions-க்கு 0.4% MDR, அதிலும் அதிகபட்சம் ₹300 மட்டுமே. Railways, Telecom, Insurance, Fuel, Agricultural Inputs போன்ற Essential Sectors-ல், ₹2,000-க்கு மேற்பட்ட Transaction-க்கு ₹5 Flat MDR மட்டுமே. மிக முக்கியமாக, Customer MDR செலுத்த வேண்டியதில்லை. இது Merchant Payment Ecosystem-க்குள் பகிரப்படும் கட்டணம்.
MDR ஏன் அவசியமாகிறது?
இன்று UPI விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்தியாவில் UPI பரிவர்த்தனை களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2,500 கோடிகள். அதில் பரிமாறப்படும் தொகை மாதத்திற்கு சுமார் 30 லட்சம் கோடிகள். இந்த அளவு ஒவ்வொரு வருடமும் 30 சதவீதம் வளர்கிறது. மொத்த உலகின் அனைத்து பரிவர்த்தனைகளில் பாதி இந்தியாவில் நடைபெறுகிறது. (https://www.npci.org.in/product/upi/product-statistics)
அதனால் Servers, Cyber Security, Fraud Prevention, 24×7 availability போன்றவற்றுக்கான செலவுகளை சமாளித்து, UPI அமைப்பு நீண்டகாலம் தன்னிறைவாக இயக்குவதற்காக MDR அவசியமாகிறது. இந்த பின்னணியில் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒரே ஒரு மணி நேரம் UPI வேலை செய்யவில்லை என்றால், என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். நம்மில் பலர் கையில் Cash வைத்துக்கொள்வதையே பெருமளவில் குறைத்து விட்டோம்.
மருத்துவமனையில் அவசரமாக பணம் செலுத்த வரிசையில் நிற்கிறீர்கள். ஒரு Restaurant-ல் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டீர்கள், Petrol Bunk-ல் பெட்ரோல் அடைத்து விட்டீர்கள், கையில் Cash இல்லை, UPIயும் வேலை செய்யவில்லை, என்ன ஆகும்? இது ஒரு நபருக்கல்ல, நாடு முழுவதும் நடந்தால்?
நிமிடத்திற்கு 5 லட்சம் பரிவர்த்தனைகள், ஒரு நாளைக்கு 80 கோடி பரிவர்த்தனைகள், சில மணி நேரம் முழுமையாகச் செயலிழந்தால், அதன் தாக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? யோசித்துப் பாருங்கள். அதிலும் A.I.யும் Cyber threats-ம் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியாவின் Payment backbone-ஆக மாறிவிட்ட UPI-யில் Security Breach ஏற்பட கடுகளவு கூட நாம் இடம் கொடுக்க முடியுமா? ஒருநாள் பெரிய Cyber Attack நடந்துவிட்ட பிறகு, “ஒரு சிறிய கட்டணம் வாங்கியாவது Infrastructure-ஐ இன்னும் வலுப்படுத்தியிருக்க வேண்டியதுNதானே?” என்று நாம் கேட்க மாட்டோமா? அதனால்தான் இந்த விவாதம் ஆரோக்கியமாக நடக்க வேண்டியது மிக அவசியம்.
UPI இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று. அது இலவசமாக இருப்பது முக்கியம். அது எப்போதும் வேலை செய்வது, அதைவிட முக்கியம். அதே சமயம், அது பாதுகாப்பாக இருப்பது, அனைத்தையும் விட முக்கியம். அதனால் கேள்வி “கட்டணமா, இலவசமா?” என்பதல்ல.
“சாதாரண மக்களையும், சிறு வியாபாரிகளையும் பாதிக்காமல், UPI-ஐ உலகின் மிகப் பாதுகாப்பான, நம்பகமான, தன்னிறைவான Payment infrastructure-ஆக எப்படி வைத்திருப்பது?” என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.
கட்டுரையாளர் : மணியன் கோபி