பெரும் சர்ச்சைகளுடன் முடிந்த மதுரை மீனாட்சி அம்மன் மகா கும்பாபிஷேகம்

பக்தர்களை பின் தள்ளி கடவுள் மறுப்பாளர்களும், ஹிந்து மதத்தை அவமதிப்பவர்களும் முன் நின்று நடத்திய கும்பாபிஷேக அரசியலை தமிழகம் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 17 – 09 -2026 அன்று பெரும் சர்ச்சைகளுடன் முடிந்தது.
சர்ச்சை-1: அரசியலாக்கிய கம்யூனிஸ்ட் தனித்தமிழ் ஆர்வலர்கள் விவகாரம்
சத்தியபாமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் – “கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருத வேதம் மட்டுமே ஓதுகிறார்கள், தமிழ் திருமுறை ஓதுவார்களை கருவறைக்கு வெளியே நிறுத்துகிறார்கள்” என்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், தமிழ் திருமுறை, தேவாரம், திருவாசகங்களை கட்டாயம் கருவறை உள்ளேயும், கோபுரக் கலசத்திலும் சமஸ்கிருதத்துடன் சேர்த்து ஓத வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை தனித்தமிழ் ஆர்வலர்கள், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றன. இவை நாத்திக இயக்கங்கள் என்பது இங்கே முரண்நகை. ஆனால் சைவ சிவாச்சாரியார்கள் தரப்பில் மந்திரங்கள் வேறு, திருமறைகள் ஓதுவது வேறு என்பதால் இது “ஆகம விதிக்கு எதிரானது” என்ற விமர்சனம் ஏற்பட்டுள்ளது .
சர்ச்சை-2: அமைச்சர்கள் மட்டும் கண்டு களிக்கவா?
அறங்காவலர்குழுத் தலைவி ருக்மணி பழனிவேல்ராஜன் நேர்காணலில் நேரடியாக கூறியபோது, “கும்பாபிஷேக ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது மேலும், அறங்காவலர் குழு கொடுத்த அழைப்பாளர் பட்டியலை நிர்வாகம் பரிசீலிக்கவே இல்லை” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இது சம்பந்தமாக மக்கள் கேள்வி என்னவென்றால் – கோயில் கொடையாளர்கள், உபயதாரர்கள், பரம்பரை பட்டர்களுக்கு பாஸ் இல்லை, ஆனால் அமைச்சர், எம்.எல்.ஏ, கவுன்சிலர் குடும்பத்திற்கு மட்டும் பாஸா? என்பதுதான்.
சர்ச்சை-3:
9,000 – பாஸ் ஒதுக்கீட்டில் முறைகேடா?
மேல்தள தரிசனத்திற்கு மொத்தம் 9,000 பாஸ் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் 2,000 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது. எனவே இது பணக்காரர்களுக்கான திருவிழாவாக மாற்றப்பட்டது என்பது பக்தர்கள் வைத்த குற்றச்சாட்டு.
சர்ச்சை-4: மோசமான ஏற்பாடு – பொதுமக்கள் அவஸ்தை
6,500 போலீசார் குவிப்பு. சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் இரும்புத் தடுப்பு வைத்து முற்றிலும் போக்குவரத்து முடக்கியது மட்டுமில்லாமல், மேலமாசி வீதியிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், கோபுர தரிசனம் கூட செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். ரோட்டோர கடைகளுக்கு 18ம் தேதி வரை தடையால், ஏழை வியாபாரிகள் பாதிப்பு. “நாங்க மனுஷங்க இல்லையா சார்?” என்று பக்தர்கள் அமைச்சர் நிர்மல் குமார் காரை மறித்து ஆவேசத்துடன் கேள்வி கேட்டனர்.
கட்டுரையாளர் : வழக்கறிஞர்