ஹாலிவுட்ல எடுக்கற படங்களை மிஞ்சற அளவுக்கு சமீபத்துல தமிழ்நாட்டுல ஊடகங்கள்ல வர்ற செய்திகள் இருக்கு. ஒவ்வொரு நாளும் வெளியாகற ஜெம் கிரானைட்ஸ்வீரமணிய பத்தின ஒவ்வொரு விஷயமும் நம்பள நிலைகுலைய வைக்கும் வக்கற அளவு படுபயங்கரமா இருக்கு.
கற்பனை பண்ணி பாக்க முடியாத அளவு, கொடூரமான வக்கிரம்புடிச்ச மனசு இருக்கற ஒருத்தனாலதான், இது மாதிரி படுபாதக செயலை சர்வசாதாரணமா செய்ய முடியும். ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, பல வருஷமா தொடர்ச்சியா திட்டம் போட்டு, நயவஞ்சகமா கள்ளமில்லாத குழந்தைகளை சீரழிச்சிட்டு இருந்த வெறிப்பிடிச்ச மிருகம். இல்ல மிருகம்னு சொன்னா மிருகங்கள அவமானப்படுத்தற மாதிரி இருக்கும். அஞ்சறிவு இருக்கற விலங்குகள் கூட, குட்டிகளை வன்புணராது. மிருகங்களை விட கேவலமான, பெரியமனுஷன் போர்வையில உலா வந்துட்டு இருந்த ஜந்து.
நாடு ப்பூரா தமிழ்நாட்டோட மானம் கப்பலேறி, இல்ல! இல்ல! விமானமேறி போயிட்டு இருக்கு! தேசிய சேனல்கள்ல இந்த செய்திகளப் போட்டு கிழிச்சி தோரணம் கட்டறாங்க. எண்பத்து நாலு வயசான இந்த கொடூரனுக்கு, பிஞ்சு சிறுமிகளை தொடர்ச்சியா சப்ளை பண்றதுக்குன்னே ஒரு கும்பல். அந்த கொடூரத்த வீடியோ எடுத்து வச்சி மிரட்டி பணம் பறிக்க ஒரு கும்பல். இதுக்கு அசிங்கத்த பஞ்சாயத்து பண்ண ஒரு அரசியல் கும்பல். பணத்தை கோடி கோடியா கறந்துட்டு, போலீஸ் கேஸை டம்மியாக்க காவல்துறையை அதிகார துஷ்பிரயோகம் பண்றதுக்கு ஒரு எலைட் கும்பல். ஒரு வருஷமா இந்த கேஸை டம்மியாக்கிட்டு கோடிகளை பறிச்ச கேடிங்க, கடைசியா கேஸை மூட கோர்ட் போனப்ப, மனசாட்சி இருக்கற ஒரு நீதிபதியால, இன்னிக்கு அந்த அசுரவெறியன் சிறை கம்பிங்களுக்கு பின்னாடி.
நடந்தது என்னன்னா…
தொடர்ச்சியா இந்த வீரமணிங்ற வக்கிரமணிக்கு சின்னஞ்சிறுமிகளை ஆசைவார்த்தை சொல்லியோ, மிரட்டியோ, சம்பந்தப்பட்டவங்களுக்கு பணம் கொடுத்தோ பல வருஷங்களா கூட்டிட்டு வர்றவங்கள்ல முக்கியமானவங்க சாந்தி. அவங்களோட போயஸ்கார்டன் வீட்டுல வச்சிதான், அந்த சிறுமிங்களோட இருக்கற கோடீஸ்வர தொழிலதிபரோட லீலைகளை ரகசியமாக வீடியோவுல படம் எடுத்து வச்சி சமயம் பாத்து ப்ளாக்மெயில் பண்ணி, பணம் பறிக்க திட்டம் போடறாங்க.
வக்கிரமணிய ப்ளாக்மெயில் பண்ணி பணமும் பறிக்க ஆரம்பிச்ச காலகட்டத்துல, சாந்திக்கு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களால மிரட்டல் வருது. அப்ப இந்த விஷயத்தை சொல்லதமிழ்நாடு காங்கிரஸ் SC/ST பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரை சந்திக்கறாங்க, தன்னோட வீட்டுல இருக்கற டி.வி.ல தன்கிட்ட இருந்த, வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செஞ்ச ரகசிய வீடியோக்களை ரஞ்சன்குமாருக்கு போட்டு காட்றாங்க. இதை ரஞ்சன்குமார் தன்னோட மொபைல்ல படம் புடிச்சி சேவ் பண்ணிக்கறாரு.
அதுக்கப்பறம் தன்னோட வழக்கறிஞர் களோட ஆலோசிச்சி நவம்பர் 22, 2024ல, சென்னை எக்மோர்ல சென்னை போலீஸ் கமிஷனர் ஆஃபீஸ்ல GEMS வீரமணி&சாந்தி ரெண்டு பேர் மேலயும் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு குடுக்கறாரு. கூடவே தன்னோட மொபைல்ல இருக்கற ஸ்கிரீன்ஷாட்டையும் இணைச்சி தந்ததா சொல்றாரு.
இதுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம்னு மூத்த காவல் அதிகாரி உறுதிசெஞ்சதாகவும் சொல்றாரு. டிசம்பர் 17ம்தேதி, காவல்துறை ஆய்வாளர் மகேஷ் கேட்டதன்பேரில் அவருக்கு தன்னிடமிருந்த வீடியோ க்ளிப்பிங்கை அனுப்பினதாகவும் சொல்றாரு. தொடர்ச்சியாக காவல்துறையிலே இருந்து, வீடியோவுல இருக்கற சிறுமிகளை தெரியுமான்னு ரஞ்சன்குமாரை கேட்டதால, தனக்கு இந்த சிறுமிகள் யாரையும் தெரியாது. ஆனா வீரமணியையும், சாந்தியையும் விசாரிச்சாலோ அல்லது திடீர்னு அவங்க வீட்டை சோதனை போட்டாலோ தேவையான ஆதாரம் கிடைக்கலாம்னு சொன்னதா சொல்றாரு.
கொஞ்சநாட்கள்ல போலீஸ் ரஞ்சன்குமாரை தொடர்பு கொள்வதை நிறுத்திட்டாங்க. அதோட வீரமணியோட புகார்மனு கிடப்பில போடப்பட்டதா சொல்றாரு.ஆனா சென்னை போலீஸ் தரப்புல போன வருஷம் அதாவது 2025 அக்டோபர் மாசம்தான், ஒரு NGO புகார் தந்ததாகவும், கூடவே வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யற வீடியோ அடங்கிய ஒரு பென்-ட்ரைவ் தரப்பட்டதாகவும் சொல்றாங்க.
அதுக்கப்பறம் தொய்வானஒரு லகுவான செக்ஷன்ல கேஸ் பதியப்பட்டு, வீடியோ ஆதாரம் சரியா இல்ல, அதுல இருக்கற நபர் வீரமணியான்னு சந்தேகமா இருக்குன்னு பல காரணம் சொல்லி, இந்த கேசை முடிக்க நீதிமன்றத்துல முறையிடறாங்க,வழக்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிAC யாஸ்மின். அப்போதைய கமிஷனரா செல்வாக்கோட இருந்தவர் அருண் IPS. ஆனா கேஸை விசாரிச்ச நீதிபதி கேசை க்ளோஸ் பண்ண முடியாதுன்னு சொல்லவே, கிணறு வெட்ட பூதம் கெளம்பின கதயா போச்சு.
இந்த விஷயம் பத்தி தொடர்ச்சியா பத்திரிக்கையாளர் வராகியும், சவுக்கு சங்கர் மாதிரி யூ-டூபர்களும் பேசவே விஷயம் பரவலா எல்லாருக்குமே தெரிய வருது. இப்பதான் எதிர்பாராம ஆட்சி மாற்றம் நடக்குது. காவல்துறை கமிஷனரா அமல்ராஜ் பொறுப்பெடுத்துக்கறார். GEMS வீரமணியோட புது வீடியோக்கள், AIRF ரயில்வே சங்கத்தலைவர் & SRMU பொதுச்செயலாளர் கண்ணையாவோட மகன் பிரகாஷ் வீட்டுல கிடைக்குது. பிரகாஷ் இப்ப தேடப்படும் குற்றவாளியா வெளிநாட்டுல தலைமறைவா இருக்காரு.
வழக்கை கமிஷனர் அமல்ராஜ் துரிதமா விசாரிச்சி வீடியோ ஆதாரங்களோட சமர்ப்பிச்சதால வக்கிரமணி இப்ப சிறையில்.சீரழிக்கப்பட்ட சிறுமிகளோட வயசு 14 – 16க்குள்ளதான் இருக்கும். அதுவும் பல குழந்தைங்க பட்டியல் சமூகத்த சேர்ந்த விளிம்புநிலை சிறுமிகள்என சொல்றாங்க.
பாஜக ஆளுற மாநிலத்தில எங்கேயாவது ஒரு பெண்குழந்தைக்கு சின்ன அநீதின்னாலும், இங்க மெழுகுவத்திய மொத்தமா கோடவுன்ல வாங்கிட்டு கருப்பு புடவை கட்டிட்டு, மீடியா முன்னாடி போராட்டம் பண்ற மாநில பெண் எம்.பி.க்களும், மாதர்சங்கங்களும், பெண்ணியப்போராளிகளும், நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் எல்லாரும் சைலண்ட் மோடுக்கு போயாச்சு.
அட!தெருநாய்க்கு தெருவில இறங்கி ஆக்ரோஷமா போராடின ஒரு செலப்ரிட்டிகூட, இப்படி வருஷக்கணக்கா கணக்கிலடங்காத இளங்குருத்துகளை சீரழிச்ச இந்த சைக்கோவ பத்தி வாயே தொறக்கல!! தெருநாய்களுக்கு இருக்கற ஆதரவு கூட, பாதிக்கப்பட்ட இந்த சின்னப்பிள்ளைங்களுக்கு இல்ல.
சீரழிக்கப்பட்ட பல சிறுமிகளும் பட்டியல் சமூகம் மற்றும் அடித்தட்டு வர்க்கத்த சேந்தவங்க. அடிச்சு போட்டா, ஏன்? கொன்னுப்போட்டா கூட கேக்க நாதியில்லாத ஏழைக்குடும்பங்களை சேந்தவங்க. சமூகநீதி வர்க்கபேதம்னு உண்டியல் குலுக்கற எந்த தோழரும், கட்சியும் வீரமணிக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைகூட விடல. அட எதிர்க்கட்சிகள் கூட கண்டுக்கவே இல்ல.
இவ்வளவு அக்கிரமத்தை தொடர்ச்சியா அரங்கேத்த எவ்ளோ திண்ணக்கம் இருக்கனும். ஒரு டஜனுக்கு மேல கம்பெனிகள், கல்வி நிறுவனம்னு பணம் கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுது. இதுல அதிகார மையங்களோட வருஷக்கணக்கான நெருக்கம், அரசியல்வாதிகளோட நெடுநாள் உறவு, காவல்துறையோட உயரதிகாரிகளோட அழுத்தம்னு பலரும் இந்த கேஸை ஒன்னுமில்லாம பண்ண முயற்சி, இப்ப வராகி போன்ற பத்திரிக்கையாளர்களால அம்பலப்பட்டு போயிருக்கு.
Tip of an iceberg போல கண்ணுக்கு தெரிஞ்ச கேஸ் இது ஒன்னுதான். இதோட வலைப்பின்னல் எவ்ளோ பெரிசு, எவ்ளோ ஆழமா ஊடுருவி இருக்குன்னு தீவிரமா விசாரிச்சாதான தெரியவரும். சர்வதேச எஃப்ஸ்டீன் ஃபைல்ஸ் மாதிரி, இதுவும் இருக்க அதிக வாய்ப்பு இருக்கு.எஃப்ஸ்டீன் ஃபைல்ஸ்க்குமத்திய அரசுக்கு எதிரா குதிச்ச ஒருத்தர் இங்க குதிக்கல!
வீடியோ தெளிவா இல்லன்னு கோர்ட்ல கொடுத்த உயரதிகாரிகள் அழுத்தத்தால, இந்த வழக்கை முடிக்க இருந்தாங்க. இப்ப கமிஷனர் அமல்ராஜ் அவங்க நடத்தின விசாரணையில தெளிவான வீடியோ சாட்சி வச்சிதான், இந்த வக்கிரமணிய சிறையில அடைச்சாங்க.
பழைய வீடியோக்கள், செய்திகள பார்த்தாலே திராவிடர் கழகத்துல நடக்கற எல்லா நிகழ்ச்சியிலயும் மேடையில இந்த வக்கிரமணி ஒக்காந்துட்டு இருக்கறதும், பல கட்சிகளுக்கு கோடிக்கணக்கில நிதி அளிச்சதும் தெரிய வருது. பணம் பாதாளம் வரை பாய்ஞ்சிருக்கறதால, இந்த அக்கிரமத்துக்கு எதிரா அப்போதைய பொம்மை முதல்வரோ, பிரதான எதிர்க்கட்சியா ஒரு வார்த்தையும் சொல்லல.
சட்டம் ஒரு இருட்டறைன்னு கட்சியோட மூத்த முன்னோடி சொன்னத தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டு , வக்கிரமணிய காப்பாத்த அரசியல், ஆட்சி அதிகாரத்த தவறா பயன்படுத்தின அத்தனை பேரையும் சட்டத்தின் முன்னாடி நிறுத்தி, அதிகபட்ச தண்டனை தரனும்ங்கறதுதான் எல்லா மக்களோட அதிலும் பிள்ளைங்கள பெத்த பெற்றோரோட கருத்தா இருக்கு.
பொறந்த குழந்தைகளுக்கு எல்லாம் தாய்மாமன் சீர் தர்ற இப்போதைய முதலமைச்சர், சீரழிக்கப்பட்ட சிறுமிங்களுக்கும் நல்ல தாய்மாமனா நியாயமான முறையில விரைவா, இந்த வழக்குல சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் கடுமையான தண்டனை தர, எந்த சமரசமும் செய்யாம தன்னோட நேரடி மேற்பார்வையில பண்ணா நல்லா இருக்கும்ங்கறது சாமான்ய மக்களோட எதிர்ப்பார்ப்பா இருக்கு.
AC யாஸ்மின், கமிஷனர் அருண், கண்ணன் காத்திருப்போர் பட்டியல்ல வச்சிருக்கறதா சமீபத்திய செய்தி சொல்லுது. மேலும் இவங்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கறதாகவும் தகவல்.
சிறையில இருக்கறவங்க ஷாப்பிங் போறாத பாத்தவங்க நாம்ப! இங்க அதெல்லாம் நடக்க கூடாது! பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கெடைக்கனும்! எண்பத்திநாலு வயசான வக்கிரமணியி விசாரிச்சு தண்டனை அளிச்சு தீர்ப்பு வர்றத தாமதமாக்காம சூப்பர் ஃபாஸ்ட் ட்ராக்ல கேஸ் நடத்தப்பட்டா நல்லா இருக்கும். என்னைக் கேட்டா அமெரிக்க நாடுகள்ல இருந்த எலக்ட்ரிக் சேர்ல ஷாக் குடுத்து மரணதண்டனை குடுக்கறது, அரபு நாடுகள்ல சந்தில நடுப்பகல்ல கல்லால அடிச்சு மரணதண்டனை குடுக்கறது, இல்லன்னா அந்த காலத்துல இருந்த மாதிரி கழுவேத்தறதுன்னு இந்த வக்கிரமணிக்கு குடுத்தா நல்ல சாய்ஸா இருக்கும்.நாம ஓவர் இரங்கக்காரர்களாச்சே!
ஜெம் வீரமணியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், சத்தியநாயக்கன்பாளையம்.இவரின் தந்தை எஸ்.பி.ராமசாமி, திமுக.1962 தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்றம் தொகுதியில், திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். எஸ்.பி.ராமசாமியின் மருமகன்,கொன்னையாறு செ.கந்தப்பன், திமுக, நாடாளுமன்ற உறுப்பினர். திமுக ஆட்சியில் 1975வரை குடிநீர்வடிகால் வாரிய தலைவர். திமுகவில் 1989 வரை கொள்கை விளக்க செயலார்.எஸ்.பி.ராமசாமியும் அவரது மருமகன் கந்தப்பனும் இணைந்து துவக்கிய குவாரிதான் ஜெம் கிரானைட். பின தேவகவுடா போன்ற கர்நாடக மாநில தலைவரோடு அறிமுகம் மூலம் கிரானைட் தொழிலில் மேலும் உயர்ந்தார்.