கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனின் குடும்பம் நடத்தும், காருண்யா கல்வி நிறுவனங்கள், ‘ஏசு அழைக்கிறார்’ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கோவை நல்லுார்வயல் கிராமத்தில் செயல்படுகின்றன. தன் அரசியல், பண செல்வாக்கால், நல்லூர் வயல் கிராமத்தின் பெயரை, ‘காருண்யா நகர்’ என மாற்றியது ‘ஏசு அழைக்கிறார்’ நிர்வாகம். மேலும் நல்லூர் வயலின் தபால் நிலையம், டெலிபோன் எக்ஸ்சேஞ் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் பெயர் மாற்றப்பட்டன. கிராமத்தின் பெயரையும் கலாசாரத்தையும் மீட்டெடுக்க அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து, ‘நல்லூர் வயல் பாதுகாப்பு குழு’ என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். பெயர் மாற்றத்தை கண்டித்து பேரணி, கையெழுத்து இயக்கம் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்வராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு நல்லூர் வயல் என பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம வாயிலில் நல்லூர் வயல் என பெயர் பலகையும் வைக்கப்பட்டது.