புரட்சியாளர் வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர் ஆகியோர் புதுவையில் தங்கியிருந்தபோது அவர்களை அல்ஜீரியாவிற்கு நாடு கடத்த பிரெஞ்ச் அரசு தீவிரமாக யோசித்தது. இச்சூழ்நிலையில் தனது நினைவாக என்றென்றும் போற்றி பாதுகாக்கக் கூடிய ஒரு நினைவுப் பரிசினை உலகுக்கு அளிக்கவேண்டும் என்ற நோக்கில் ஐயர் திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினார்.
ஒருநாள் வ.வே.சு. அய்யர் இல்லத்தில் சோதனையிட போலீஸ் உள்ளே நுழைந்தது. வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த ஐயர், அவர்களை வரவேற்று விருப்பம்போல் சோதனையிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு தனது மொழிபெயர்ப்புப் பணியை தொடர்ந்தார். சோதனை முடிந்த பின் எந்தவிதமான சஞ்சலமுமின்றி கடமையே கண்ணாகக் கொண்ட ஐயர் தனது மொழிப்பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு போலீஸார் வியந்துபோயினர்.
தவமயமான ஐயரின் முயற்சியில் உருவானது தான் ‘The Kural‘ என்ற திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்!!